27.மீரா

320 53 20
                                    

"வற்றாத வரம் பெற்றது
என் கண்கள்..
நேசிப்பவை எல்லாம்
கைசேரா சாபம்
பெற்றது நான் என்பதால்..
தினம் கண்களில்
விதைத்த நினைவுகள்..
இன்றோ கரைகிறது
கண்ணீரென..
துணையென
உன்னை அழைக்க..
கிடைத்தது ஏனோ
தனிமைக்கு கைசேராத
நேசம்..
உரிமையற்ற உன்னை
உணர்வோடு பிணைத்தேன்..
விளைவாய் உரிமைகளை
பறித்து ஒதுக்கினாய் ஏனடி..
ஊமையென கண்ணீர்
கொண்டே காயங்களை
ஆற்றுகிறேன்
தனிமையில் நான்.."

"அம்மா" என தன் தாயை இலேசாக தோளில் தட்டி நினைவிற்கு அழைத்து வந்தான் கதிர்.

திரும்பி கதிரை பார்த்தவர் வாசலை கவனிக்காதவர் போன்றே, "வாப்பா சாப்பிடலாம்" என்று சமையலறை பக்கமாய் திரும்பினார்.

"அம்மா" என மெல்லிய குரலில் கதிரும் அதே நேரம்..

"மீனாட்சி! நம்ம வீட்டு வாசலுக்கு வந்தவங்கள யாரா இருந்தாலும் உள்ள வர சொல்லனும்.. கோபம் எல்லாம் இரண்டாவது தான்.." என எழில் குடும்பத்தினரிற்கு கேட்காதவண்ணம் மெதுவாயும் கூறினார் கலைவாணன்.

இருந்தும் மீனாட்சி அசையாமலே நிற்க, கதிரின் கண்ணசைவில் ஷியாமளா வாசல் பக்கம் சென்றாள்.

"வாங்க.." என்றாள் ஒற்றை வார்த்தையில்.  எவ்வளவு தான் கோபத்தை மறந்து வரவேற்க முயன்றாலும் ஒற்றை சொல்லை மட்டுமே உதிர்த்திட செய்தது அவளது மனம்.

ஆனால் இந்த ஒற்றை சொல்கூட அதிகம் தான்.. தன் மகள் செய்த வேலைக்கு, என்று எண்ணி நொந்தவாரு உள்ளே தயக்கமாகவே முதலில் தயாளன் நுழைய, தொடர்ந்து திவ்யா மற்றும் அகரன் நுழைந்தனர்.

உள்ளே வந்தவர்கள் எங்கிருந்து ஆரம்பிப்பது என தெரியாமல் அமைதி காக்க, உட்கார கூறும் நிலை இங்கும் இல்லை என உணர்ந்து வீட்டினரும் அதே அமைதியை பதிலென கடைப்பிடித்தனர்.

கதிரழகிDonde viven las historias. Descúbrelo ahora