2. ஹேமா இன்பா

618 90 75
                                    

"ஹே ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட... ஊ
ரகிட ரகிட ரகிட...

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்.
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்.

எனக்கு ராஜாவா நான்..."

தாளமிட்டபடியே பாடிக் கொண்டிருந்த தன் நண்பர்கள் கூட்டத்தோடு தன்னையும் இணைத்துக் கொள்ளாமல் தனியே சிந்தனையில் மூழ்கியிருந்தான் அகரன்...

"டேய் அகரா! இப்போ எதுக்கு உம்முனு இருக்க..? பார்க்க சகிக்கல... செமஸ்டர் லீவ் முடிஞ்சு இன்னிக்கு தான் காலேஜ்க்குத் திரும்ப வந்துருக்கோம். ஜாலியா இருப்பன்னு பார்த்தா... நீ இழவு வீட்டுக்கு போயிட்டு வந்தவன் மாதிரி இருக்க...", கிண்டலாக கேட்டபடியே அகரனின் அருகே அமர்ந்தான் அவனின் ஆருயிர் தோழன் அபினவ்.

"உனக்கென்ன ராஜ வாழ்க்கை... காலேஜ் திரும்பவும் ஓபன் பண்ணதுனால உன்னோட லவ்வர் கூட ஜாலியா இருப்ப. எனக்கு அப்படியா?" சுரத்தே இல்லாமல் வந்தது அகரனின் பதில்.

"அதுக்கென்னடா.. சிங்களா இருக்குற நீயும் மிங்களா ஆகிட வேண்டியது தான..?  உன் பின்னாடியே சுத்திட்டு இருக்குமே அந்த ஜூனியர் பொண்ணு அத வேணும்னா உசார் பண்ணிக்கோ. அப்புறம் நீயும் அந்த பொண்ணும் ரகிட ரகிட ரகிடதான்..." மீண்டும் கிண்டலாக வந்தது அவனின் வார்த்தைகள்.

"அதெல்லாம் பொண்ணே இல்லடா. பேயி.. ச்சே நினைக்கவே ரொம்ப பயமா இருக்கு. அந்த மேட்டர விடு, என்னோட கவலையே வேற மச்சான்.", என்றவன் மீண்டும் யோசனையில் மூழ்கினான்.

"அப்படி என்னதான் பிரச்சினை உனக்கு? சொல்லி தொல. எதுனாலும் பார்த்துக்கலாம்... கூல் டவுன் அகி.",

"என்னோட அக்கா மச்சான்." என்றவனின் குரல் உள்ளே சென்றது.

"உன்னோட அக்காக்கு என்னடா? யாரையாவது லவ் பண்றாங்களா? உன்னோட அக்காகிட்ட மாட்டிக்கிட்ட அந்த அப்பாவி ஜீவன் யாருடா?" அகரன் அமைதியாக இருப்பதை காண பொறுக்காது மீண்டும் சீண்டினான் அபினவ்.

கதிரழகிDonde viven las historias. Descúbrelo ahora