15.சல்மா காதர் பாட்சா

373 56 24
                                    

"பொண்ணுங்க கூட சீக்கிரம் ரெடி ஆயிடுவாங்க. நீ கிளம்ப வேண்டாம் ரெண்டு மணி நேரம் ஆகுதுடா."

"நான் என்னக்கா பண்ண. பொண்ணுங்க எல்லாம் என்னை பாத்து சைட் அடிக்கும் போது கடுப்பா இருக்கும். ஆனால் இவ என்னை திரும்பிக்கூட பார்க்காம இருக்குறது கஷ்டமா இருக்கு. இப்படி எல்லாம் அழகா போனாலாவது என்னை பார்க்க மாட்டாலாங்குற நப்பாசை தான்."

"என் தம்பியவே சுத்தல்ல விட்டுட்டார பாரேன் கதிரழகி."

"பல பேர் சுத்தல்ல விட்டதால கடவுள் என்ன சுத்தல்ல விட்டார் போல."

கதிர் பேசிக்கொண்டிருக்கும் போதே அவன் அலைபேசி அடித்தது. எடுத்துப் பார்த்தவனின் முகம் ஆச்சரியத்தில் மின்னியது.

"என்னடா சோககீதம் வாசிச்ச பேஸ் ப்ரைட்டாகுது. யார்ரா போன்ல?"

"எல்லாம் என்னோட ரத்தக்காட்டேரி தான்."

"என்னடா அதிசயமா இருக்கு உனக்கு போன் பண்றா?"

"அதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. சரி சரி நாங்க ப்ரைவேட்டா பேசுவோம். நீ கொஞ்சம் வெளியே போ."

"அடப்பாவி உன் ஆள் வந்ததும் அக்காவையே கழட்டிவிட பாக்கிறியா. அப்படி என்ன ப்ரைவேட் கொடுடா."என பிடிங்கியவள் போனை அட்டெண்ட் செய்து ஸ்பீக்கரில் போட்டாள்.

"டேய் நெட்ட கொக்கு என்னடா பண்ற?"

"என்ன அதிசயமா இருக்கு. நீயே எனக்கு போன் போட்டு இருக்க. என்னை கொஞ்சம் நேரத்துல நேர்ல பார்க்க போறியே அதுக்குள்ள என் குரலை கேட்க உனக்கு அவ்ளோ ஆசையா?"

"ஆசை நிறைய இருக்கு ராசா. அதெல்லாம் அப்பறம் சொல்றேன். நீ நான் சொன்னதெல்லாம் பண்ணியா? இல்லையா?"

"என்ன பண்ணனும் நீ என்ன சொன்ன?"

"நிச்சயம் நிறுத்த சொன்ன ஐடியாவெல்லாம் அப்ளை பண்றியா இல்லையா?"

கதிரழகிWhere stories live. Discover now