36. நிவிதா ஜெனி

311 58 43
                                    


எழிலின் இறுதி செல்போன் டவர் நேஷனல் ஹைவேய்ஸ் இல் ஸ்விட்ச் ஆஃப் ஆகி இருப்பதை அறிந்த கதிரும், அபினவும் அதை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர். நேஷனல் ஹைவேய்ஸ் ஐ அடைந்து விட்ட இருவரும் அங்கிருந்து எங்கு போய் எழிலைக் கண்டுபிடிப்பது எனப் புரியாமல் குழம்பிக் கொண்டிருக்க, திடீரென அவனது செல்போனுக்கு தனக்கு சற்று நேரம் முன்பு தர்ஷித் சவால் விட்ட எண்ணிலிருந்து அழைப்பு வந்தது.

வந்த அழைப்பை அவசரமாக எடுத்தவன் அடுத்த முனையில் கேட்ட வர்ஷித்தின் சிரிப்பு சத்தத்தில் வர்ஷித் தான் இதற்கு காரணம் என உறுதி செய்து கொண்டான்.

"என்னடா பங்காளி, கட்டிக்க போற பொண்ண பறி குடுத்துட்டு நடுரோட்டுல தனியா நிக்கற போல?"

"இல்ல, கூட என் அத்த பையனும் இருக்கான்." கதிர் சட்டென கூற அதில் முகம் வெளுத்த தர்ஷித்,

"என்ன காமடி பண்றியா... நான் தான் டா எழில கடத்தி வச்சிருக்கன். உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ. ஹ்ம்... என்னடா கால் பண்ணி சவால் விட்ட கொஞ்ச நேரத்துலயே என் வேலைய காட்டிட்டேன்னு மண்ட கொழம்பி போய் நிக்கறியா?" என அவன் கோபமாக பேசவும் தன் கோபத்தை கடினப்பட்டு அடக்கிக் கொண்ட கதிர் அமைதியாக,

"எழில எங்க வச்சிருக்க?"

"அவசரப்படாத பங்காளி... நான் ஒண்ணும் சீரியல் வில்லன் கெடையாது, சொல்லிட்டு 3 நாள் கழிச்சு ஆக்ஷன் ல இறங்குறதுக்கு. இப்போ இன்னைக்கு இன்னும் பதினஞ்சு நிமிஷத்துல எழில் கழுத்துல தாலி கட்டி அவள என் மனைவி ஆக்கிக்க போறன். உன்னால முடிஞ்சத பண்ணிக்கோடா... அப்றோம் முக்கியமான விஷயம், இந்த நம்பர ட்ரேஸ் பண்ணனும் னு நெனைக்காத, நெனச்சாலும் பண்ண முடியாது." என்றான் திமிராக. மீண்டும் ஒரு பெருமூச்சை இழுத்து தன்னை கட்டுப்படுத்திக் கொண்ட கதிர் அவனிடம்,

"எழில் உன்கிட்ட தான் இருக்கான்னு நான் எப்டி நம்பறது?"

"ஹ... அவ குரல கேக்றியா? ஒரு நிமிஷம்" என்ற வர்ஷித், எழில் இருந்த இடத்தை நோக்கி செல்வது அவன் காலடித் தடங்கள் மூலமாகவே தெரிந்தது. அதற்குள் அங்கு இன்னுமொரு ஆளின் குரல் கேட்கவே, அவன் கத்திக் கொண்டிருப்பது செல்போன் மூலமாக கதிரின் காதிலும் விழுந்தது.

கதிரழகிWhere stories live. Discover now