34 மலர்பாலா

315 52 14
                                    

34. மலர் பாலா

தர்ஷித்தின் அழைப்பைத் துண்டித்தவனுக்கு அவனது பேச்சுகள் சிறு நெருடலாகவே தோன்றியது.

'எப்படியும் எழிலிடம் கூறினால் அவள் விளையாட்டாக எடுத்து கொள்ளத்தான் வாய்ப்புகள் அதிகம்' என்று நினைத்தவன். 

அவளிடம் கூறுவதை விட அவளது பெற்றோர்களிடம் இதைப்பற்றி பேசி சிறிது கவனமாக இருக்க சொல்லவேண்டும்  என நினைத்து கொண்டான். 

அலைபேசியில் அழைப்பு வரவும் தனியாக வந்து பேசிய கதிர் மீண்டும் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்தான். 

தற்போது தர்ஷித் தான் அழைத்தான் என்று கூறினால் இங்கு இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்துவிட கூடும். எதுவும் கூறாமல் இருப்பது நலம் என்று நினைத்து நடந்தவன் காதுகளில் எழிலின் வார்த்தைகளே விழுந்தன...

"அந்த வளர்ந்து கெட்டவனுக்கு சரியான திமிர் அண்ணா. நான் எவ்வளோ நேரமா அந்த வரிசையில் நின்னேன் தெரியுமா? அவன் என்னடான்னா வேகமாக என்னை தாண்டி போய் பால் கேட்கிறான்! எனக்கு வந்ததே கோபம்.." என்று நடந்ததை அப்படியே தலைகீழாக கூறிக் கொண்டிருந்தது கதிரின் நண்பன் பாலாஜியிடம் தான். 

'அடிப்பாவி!!! பாதகத்தி... நடந்ததை கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அப்படியே மாற்றி சொல்றாளே! இருடி வரறேன்' என்று எண்ணியவன் வேகமாக அவனது இருக்கையில் அமர்ந்து "என்னமா சொன்ன? நான் உங்களை முந்திக்கிட்டு போனேன்.. நீங்க வரிசையில் கால் வலிக்க நின்னீங்க இல்ல? இதுவரை சூரிய ஒளியை உன் கண்னால.. கண்களை விடு கனவிலாவது பார்த்துருக்கிறாயா நீ?" என்றான்.

எழில் கதிர் அங்கு இல்லை என்கின்ற தைரியத்தில் தான் கூற ஆரம்பித்தாள். ஆனால் அவள் ஆரம்பித்த போதே கதிர் அங்கு வந்துவிட்டான் என்பதை அவள் கவனிக்க தவறவிட்டது அவள் நேரம் போல..

இருந்தாலும் இதுக்காகவெல்லாம் தன் வாயை மூடிக்கொண்டால் அது எழில் இல்லயே... அவளும் பதிலுக்கு
"என்ன சொன்ன? எனக்கு கண்தான் இல்லையா? இல்லை நான் இருக்குற இடத்தில சூரியன் உதிக்காதா? உனக்கு எவ்ளோ தைரியம் இருக்கணும்?" என்றாள். 

கதிரழகிWhere stories live. Discover now