37. பிந்து சாரா

250 48 20
                                    

37. பிந்து சாரா

அழகியின் அத்தை அம்சவேணியின் மொத்த குடும்பமும் தலை குனிந்திருக்க…

பாசமாக தன்னை வளர்த்த அத்தையாக இருந்தாலும்…அவராலும், அவர் மகனாலும் நடந்ததை மன்னித்து, மீண்டும் அவர்களை ஏற்றுக்கொள்ளும் எண்ணம் எழிலுக்கு மட்டுமில்லை… அவள் குடும்பத்துக்கும் வரவில்லை.

“என்னை மன்னிச்சிடுங்க…“ என்ற அம்சவேணி... அண்ணன் குடும்பத்துக்கு முன்னால் மன்னிப்பு கிடைக்கும், என்று பரிதாப முகத்தோடு நின்றிருக்க. 

எழில் குடும்பத்தில் இருப்பர்களிடமிருந்து.. அலட்சிய பார்வை தான் கிடைத்தது.. 

“ நானும் என் பையனும் செய்த பாவத்துக்கு.. மன்னிப்பு கிடைக்காதுனு  தெரிஞ்சி போய்யிடுச்சி.. நான் போறேன் அண்ணா“ கதிர் புறம் திரும்பிய அத்தை.

“தம்பி நீங்களாவது எங்களை மன்னிச்சிடுங்க..” இருவர் செய்த தவறுக்கு மொத்த குடும்பமும் தலைகுனிந்து அந்த இடத்தை விட்டு நகரும் போது. 

“சித்தி… ஒரு நிமிஷம்.." என்ற கதிரின் குரல் அவர்களை தடுத்தது.

'என்ன?' என்பது போல் எதிர்பார்ப்புடன்  பார்த்தார் அம்சவேணி.

"வீட்டுக்கு வந்து கல்யாணத்துக்கு இன்விட்டேசன்.. வைக்கறேன்… நிச்சயம் நம்ம குடும்பத்துல எல்லோரும் வந்து சேருங்க“ கதிர் மறைமுகமாக அவர்களுக்கு மன்னிப்பு கொடுத்து புன்னகைத்தான்.

எழிலின் மொத்த குடும்பமும்… கதிர் கூறியதை நம்பாமல் பார்த்திருக்க, 
அப்போது தான் நடந்தவைகளை கேள்விப்பட்டு வந்த மாறனுக்கும் கதிர் ஏன் இப்படி நடந்து கொள்கிறான் என்று கோபம் தோன்ற… அவன் அவ்வளவு சுலபமாக அனைவரையும் மன்னிப்பது யாருக்கும் பிடிக்கவில்லை. 

எழிலுக்கு தாறுமாறாக கோபம் வர.. "மாறா... நான் இங்கே இருந்தேன்னு வை உங்க நொண்ணனை உண்டு இல்லன்னு செஞ்சுருவேன்.. வா நாம எங்கயாவது போய்ட்டு வரலாம். இங்க இருக்கவே எனக்கு பிடிக்கலை" என்று மாறனின் கரத்தை பிடித்தபடி யாரையும் கண்டுகொள்ளாமல் வேகமாய் வெளியேறினாள்.

கதிரழகிOù les histoires vivent. Découvrez maintenant