அறைக்குள் சென்றவள். மனம் போன போக்கில் நிச்சயத்தன்று நடந்த நிகழ்வை எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்க, அந்த நேரம் தன் தோழி நிஷாவிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஏதோ ஒரு மனநிலையில் கைப்பேசிக்கு உயிர் கொடுக்க..., அவள் ஹலோ சொல்லும் முன் கேட்டது மாறனின் குரல். தோழியின் கைபேசியில் மாறனின் பேச்சு சத்தம் கேட்டதும் குழம்பிய எழில் வார்த்தையை உதிக்காமல் காதை தீட்ட.... கதிர் மாறன் இருவரும் பேசும் ஒவ்வொன்றும் தெளிவாக விழுந்தது.
இது தான் பேசப் போகிறார்கள் என நிஷாவிற்கு தெரியாது. தன் தோழிக்கு ஏதற்கோ உதவும் என்று அழைத்திருக்க,அவள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை இந்த அழைப்பு மாற்றியிருந்தது.
ஏற்கனவே காலையிலிருந்து அபி, மாறன் பேச்சுக்களால் ஆழ்மனதை தட்டி எழுப்பி.. போகும் வழி தெரியாமல் அலைய வைத்திருக்க.. இப்போது அதற்கு முழு வடிகாலாய் கதிரின் வார்த்தைகள் அமைந்துவிட்டது.
அந்தப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்த நிஷாவிற்கு குற்ற உணர்ச்சிகள் தாங்கவில்லை. தோழிக்காக.. தன் எதிர்காலமும் சேர்ந்து இருக்கிறது என்பதை உணராது செய்திருக்க... இதில் பாதிக்கப்பட்டவன் இரு பெண்களின் நலனையும் எண்ணி தன் மீது பழியை சுமந்து கொண்டிருக்கும் செயல் தான் பெண் மனதில் மேலும் குற்ற உணர்ச்சியை தூண்டி இருந்தது. அந்தப்பக்கம் கேட்டுக்கொண்டிருந்த எழிலுக்கு அழுகை முட்டிக்கொண்டு வர... கதிருக்கு அழைப்பு வரும் நொடி பாதியில் கைப்பேசியை அனைக்க, நாளையிலிருந்து கதிர் கல்லூரிக்கு வருவது தெரியாமல் போனது.
எழில் அலைபேசியை அணைத்ததை உணர்ந்த நிஷா .. கதிரிடம் மன்னிப்பு கேட்க முடிவெடுத்து அவனிடம் செல்ல, வெகுநேரமாக கதிருக்கு பின்னாடி நிற்கும் பெண்ணை கவனிக்காமல் இருவரும் உண்டு கொண்டிருந்தனர்.
"அண்ணா அந்த சிக்கனை எடுங்க.." என்ற மாறன் கையை தூக்கும் நேரம் தான், நிஷா நிற்பதை கவனித்தான். யார் இந்த பெண் என யோசித்துக் கொண்டே கதிரிடம் கண்ண காட்ட.., அவனும் திரும்பி பார்த்தான்.

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...