13. கதாரசிகை

375 56 14
                                    

மறுநாள் காலை திவ்யா உறங்கிக் கொண்டிருக்கும்  எழிலை எழுப்ப பெரும்பாடு பட்டுக் கொண்டிருந்தார்.

"ஏய் எழிலு எழுந்திரி டி நாளைக்கு நிச்சயமாக போகுது.. இன்னும் கொஞ்ச நாள்ல கல்யாணம் வேற ஆக போது நிறைய வேலை எல்லாம் வேற இருக்கு ... இது எத பத்தியும் கவலைபடாம தூங்கிட்டு இருக்க.... காட்டு கத்து கத்தறேன் கொஞ்சமாச்சும் அசையறாளா பாரு" என்று வழக்கமான தனது அர்ச்சனையை எழிலை உலுக்கியவாறு கொட்டிக் கொண்டிருந்தார்.

எழில் எதற்குமே அசையவில்லை நன்றாக இழுத்து போர்த்திக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தாள். திவ்யா எழுப்பி எழுப்பி சலித்து போய் அங்கிருந்து சமைக்க சமையலறை சென்று விட்டார்.

வருணா தன் அன்னையின் அர்ச்சனையையும் தனது அக்காவின் உறக்கத்தையும் கண்டு புன்னகைத்தவள் மூளைக்குள் ஓர் யோசனை தோன்ற மெதுவாக எழில் அருகில் சென்று அமர்ந்தாள்.

'இப்ப எப்படி எழ போறான்னு பாரு' என்று நினைத்த வருணா "அக்கா அக்கா எழுந்திரி மாமா வந்திருக்காரு உன்னை பார்க்கனுமாம்" என்று எழிலை உலுக்க, அடித்து பிடித்து பதறி எழுந்து அமர்ந்தாள் எழில்.

தலை முழுதும் கலைந்து தலைமுடி அவள் முகத்தில் அங்கும் இங்கும் படிந்தவாறு இரவு உடையில் இருந்தாள் எழில். தன்னை ஒரு முறை கீழே குனிந்து பார்த்தவள், "இந்த ட்ரஸ்ஸோட அந்த நெட்டகொக்கு என்னை பார்த்தான் வெறுப்பேத்திட்டே இருப்பான் அவனுக்கு அந்த சான்ஸ் கொடுக்கவே கூடாது" என்று வாய்விட்டே புலம்பியவள் அவசரமாக குளியலறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

வருணா எழிலின் பதட்டத்தையும் புலம்பலையும் கேட்டு கலகலவென சிரித்தாள்.

இன்று அகரனே பால் வாங்க சென்றிருக்க ஜாக்கிங் சென்ற கதிரோ தன்னவள் வராததால் ஏமார்ந்து தான் போனான்.

அகரன் சோகமாக ஜாக்கிங் செய்துக் கொண்டு தன்னை கடந்து செல்லும் கதிரை கண்டவன் குழப்பமாக "மாமா" என்றழைத்தான்.

கதிரழகிWhere stories live. Discover now