42. விபா விஷா

248 51 7
                                    

பேசப்பட்ட ஒவ்வொருவருக்கும் அந்தத் திருமணம் நிச்சயிக்கப்பட்ட தினத்திலிருந்து.. இரவு, பகல் எனப் பாராது நித்தமும் கனவுலகில் சஞ்சரிக்கும் நிலை தான் ஏற்படும்.

அதிலும் அந்த கனவு, தனது வருங்காலத் துணையுடனான இனிய நிகழ்வுகளைப் பற்றியதாகவே தான் இருக்கும்.

ஆனால் இங்கு கதிருக்கோ.. இப்படி ஒரு பயங்கரமான கனவு வரவே, அவன் தூக்கத்திலிருந்து விருட்டென விழிக்க, அவன் முகமெங்கும் முத்து குளித்தாற்போல வியர்வையில் நனைந்திருந்தது.

அதிலும் அன்றைய தினம் தான் இத்தனை நாள் ஆசையாய் எதிர்பார்த்திருந்த நாளாயிற்றே? ஆம் கதிருக்கும், எழிலுக்கும் திருமணம் நிச்சயதார்த்தம் நடக்க இருந்தது அன்று.

ஆம்.. இரு வீட்டாரும் அமர்ந்து பொறுமையாக பேசி தங்களுக்குள்ளான கருத்து வேறுபாடுகளை பற்றி பேசி, முழுமையாய் இல்லாத போதும் இருகுடும்பமும் தங்கள் பிள்ளைகளின் மகிழ்ச்சி பொருட்டு ஓரளவு சமாதானமாகியிருந்தார்கள்.

மீனாட்சியின் மனதில் எழிலை மருமகளாக இன்னும் முழுமனதுடன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கதிரின் அக்கா தான் கதிர் எழில் மேல் வைத்திருக்கும் அன்பை பற்றியும் எழிலை தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் நினைக்க மாட்டான் என்பதை ஆணித்தரமாக அழுத்தி கூறியதால் வேறு வழியில்லாமல் தலையாட்டினார்.

ஒருவழியாய் தன் காதல் கைகூடி நிச்சயம் வரைக்கும் வந்ததில் கதிர் மகிழ்ச்சியோடு அந்நாளுக்காக காத்திருந்தான். அதனால் இப்படி ஒரு கனவு வரவும் கதிருக்கு உள்ளுக்குள் என்னவோ போலிருந்தது.

"சே.. என்னதிது.. இன்னிக்கு பொழுது விடிஞ்சதே சரியில்லையே? எல்லா பிரச்னையும் முடிஞ்சு இப்போ தான் நிச்சயதார்த்தம் வரைக்கும் வந்துருக்கு.. இந்த சமயத்துல சம்மந்தமே இல்லாம இப்படி ஒரு கனவு ஏன் வரணும்?" என்று மனத்திற்குள்ளாக புலம்பியவனுக்கு அவனது இஷ்டமின்றியே அந்த கனவு மீண்டும் ஒருமுறை அவனது மனத்திரையில் ஓடியது.

கதிரழகிWhere stories live. Discover now