6. செவ்வந்தி துரை

457 75 94
                                    

எழிலழகியிடம் தானும் தன் காதலியும் மாட்டிக் கொள்ள கூடாது என்று கடவுளை வேண்டிக் கொண்டிருந்தான் அபினவ்.

எழிலழகி அவனை குறும்பாக பார்த்தாள்.

"நான் உன் நலம் விரும்பி தம்பி பையா.! அன்னைக்கு உங்க வீட்டுல நீ அடி வாங்கினன்னு தெரிஞ்சி எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்தது தெரியுமா.?" என்றவளை அதிர்ச்சியாக பார்த்த அபினவ் நெஞ்சில் கையை வைத்தபடி ஓரடி பின்னால் நடந்தான்.

"நலம் விரும்பின்னா அதுக்கு வேற மீனிங் இருக்கு தாயே! பிரேக் டைம்ல இந்த வராண்டாவுல சின்னதா நடை போடலாமேன்னு வந்தேன்.. என்னை விடு. நான் என் கிளாஸ்க்கு போறேன்.." என்றவன் அவளை தாண்டி நடக்க முயன்றான்.

'மூஞ்சியும் சரியில்ல.. இவன் முழியும் சரியில்ல.. என்னவா இருக்கும்.? ஒருவேளை உண்மையாவே லவ் ஏதும் பண்றானா.? அப்படி ஏதும் இருந்தா உடனே அதைக் கண்டுப்பிடிச்சி இவங்க அப்பாக்கிட்ட போட்டு தந்தாதானே எனக்கு நைட் தூக்கமே வரும்.!' என்று நினைத்தாள் அவள்.

'பிசாசுக்கிட்ட இருந்து தப்பிச்சேன்டா சாமி.. எல்லா கடவுளும் நல்லா இருக்கட்டும்..' என நினைத்தபடி அபினவ் அவளை தாண்டி இரண்டடி நடந்திருப்பான். அதே நேரத்தில் "ஹேய் பேபி.." என்றபடி வராண்டாவின் கடைக்கோடியில் இருந்து ஓடி வந்தாள் வர்ஷிகா.

வர்ஷிகாவின் குரலை கேட்டு அதிர்ந்துப் போன எழிலழகி குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள்.

இந்த இடைவேளை நேரத்தில் தன் காதலன் முகத்தை ஒரு தரமாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையில் ஓடோடி வந்த வர்ஷிகா வராண்டாவிற்குள் அடியெடுத்து வைத்த நேரத்தில் முதலில் தென்பட்டது அபினவ்தான். ஆசையின் மிகுதியில் ஓடி வந்தவள், அபினவ்வின் பின்னால் முதுகு காட்டி நின்றுக் கொண்டிருந்த எழிலழகியை கவனிக்கவில்லை. எழிலழகி தன் புறம் திரும்பியதும் அதிர்ச்சியில் அப்படியே சிலையாக நின்று விட்டாள் வர்ஷிகா.

கதிரழகிМесто, где живут истории. Откройте их для себя