11. மைண்ட் மிரர்

422 62 28
                                    

வருணாவை அதட்டியவள்
ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

"டேய் யார்டா நீ? நான் கேட்ட கேள்விக்கு இன்னும் பதில் சொல்லல" என கத்த எதிர் முனையில் இருந்த கதிருக்கோ 'பொண்டாட்டி கிட்ட ஆசையா பேச வந்தா... இவ என்னடானா என்னயவே யாருன்னு கேட்குறா. இவள விரும்பினதுக்கு இன்னும் என்ன எல்லாம் நான் அனுபவிக்கனுமோ. கடவுளே ' என்று இருந்தது.

" சாரி டாபி... அகய்ன் சாரி... எழில்.... நான் இளங்கதிர் பேசறேன்" உன்னோட இளா பேசறேன்னு சொல்ல அவனுக்கும் ஆசை தான். ஆனால் அதற்கு எதிர் தரப்பில் இருந்து வரும் ஏவுகணைகளை நினைத்துப் பார்த்தவன் அமைதியாக இருந்தான்.

"எழில் நீ நிட்சயத்த நிறுத்த எதாச்சு திட்டம் வெச்சி இருக்கியா?"

" ஆயிரம் திட்டம் வெச்சி இருக்கேன். ஆனா, அது எல்லாத்தையுமே உன்கிட்ட சொல்ல முடியாது. உன் வேலய பார்த்துட்டு போ" என்றாள் துடுக்காக.

"இங்க பாரு நான் ஒண்ணும் ஆசையா இதுக்கு சம்மதிக்கல்ல. இந்த நிச்சயம் நின்னா எனக்கும் சந்தோஷம் தான். நீ என்னனு சொன்னா நானும் உதவி பண்லாம்னு தான் கேட்டேன்"

சிறிது நேரம் இவனை நம்பலாமா வேண்டாமா என யோசித்தவள் இவனை விட்டால் வேற யாரும் தனக்கு உதவ இல்லை என்றதும் " இங்க பாரு நெட்ட கொக்கு  ஏதாச்சும் வில்லங்கமா பண்ண நெனச்ச அன்னைக்கு பைக்ல முட்டின போல இந்த தடவை லாரி ஏத்திருவேன் " என மிரட்ட கதிரின் கைகள் தானாய் அன்று காயம் பட்ட இடத்தை வருடியது.

"அம்மணி உன்ன யாராலையும் ஏமாற்ற முடியுமா நீ சொல்லு நான் உதவி பன்றேன்" என்க எழில் தான் வைத்து இருந்த திட்டத்தை சொன்னாள். கேட்டு முடித்த கதிர் "சூப்பர் இதுக்கு முன்ன எங்கயாச்சு டிடக்டிவ்வா இருந்தியா.? இன்னா மாதிரி பிளான் போட்டு இருக்க. சரி... நாளைக்கு டிரஸ் எடுக்க போகனும் எல்லார் முன்னாடியும் நாம லவ்லி கபுல்சாவே இருப்போம். அப்போ தான் சந்தேகம் வராது இப்போ போய் தூங்கு. குட் நைட்... " 

கதிரழகிTahanan ng mga kuwento. Tumuklas ngayon