45. சிவால்யா கிருஷ்ணவி

259 42 6
                                    

சிறிது நேரத்திற்கு முன்,

இருவர் வீட்டாரிடமும் கூறிவிட்டு காரை எடுத்துப் புறப்பட்ட கதிர் வண்டியைச் செலுத்தியபடியே எழிலை பார்க்க, அவளோ முகத்தைத் திருப்பியபடி வெளியே வேடிக்கை பார்த்தக்கொண்டு வந்தாள்.

அவளை இருமுறை அழைத்தும் பதிலில்லாததால் வண்டியை நேராகச் செலுத்தியபடியே அவள் தோள்தொட்டு திருப்பிப் பார்த்தவன் அதிர்ந்தான்.

எழிலின் கண்களில் நீர் தேங்கி முகம் வாடியிருப்பதைக்  கண்டு மனம் கலங்கியவன் காரை உடனே நிறுத்தினான்.

அவள் முகத்தை வருத்தத்துடன் பார்க்க, அவளோ என்னவென்று சொல்லமுடியாத சோகம் கண்களில் குடிகொள்ள அவனை ஏறிட்டாள்.

அவள் இன்னும் பயத்திலும் வருத்தத்திலும் இருக்கிறாள் என்பதை உணர்ந்தவன் அடுத்து எதுவும் பேசிடாமல் வண்டியை நேராகக் கடற்கரைக்குச் செலுத்தினான்.

கடற்கரைக்கு வந்ததும் இருவரும் மௌனமாக நடந்தபடி வந்து ஓரிடத்தில் அமர்ந்தனர். சில நிமடங்கள் அமைதியாக எழிலை பார்த்திருந்தவன் அவள் சோகநிலையில் மாற்றம் இல்லாமல்போக அவள் முகத்தை கையில் ஏந்தியவன் அவள் கண்ணீரைத் துடைத்தபடி,

"அழகி..! இன்னும் அம்மா சொன்னதையே நினச்சிட்டுருக்கியா? அவங்க கோபத்துல பேசினத நீ எதுக்காக சீரியஸா எடுத்துக்குறடா? நான்தான் ஏற்கெனவே சொல்லிட்டேன்ல. அதுக்காகல்லாம் ஃபீல் பண்ணாதனு" என்று அவளைப் பார்த்து மென்மையாகக் கூறினான்.

"நான் அவங்க பேசினதுக்காக ஃபீல் பண்ணல இளா. அவங்க கோபம் ரொம்ப நியாயமானது. அந்த இடத்துல அவங்களோட புள்ளமேல அவங்க வச்ச அளவுகடந்த பாசம்தான் எனக்கு தெரிஞ்சது. உங்களபத்தி எப்பவும் அவங்க கவலப்படுறாங்க. அதான் அப்டி பேசினாங்க. அதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல.." என்று தெளிவாகக் கூறியவளை விநோதமாகப் பார்த்தவன்,

கதிரழகிWhere stories live. Discover now