அறிமுகம்

1.4K 60 7
                                    

✍️எழுத்தாளர்களின் சங்கமம்👏

எங்களுடன் பயணிக்கும் நட்புகளுக்கும் வாசகர்களுக்கும் அன்பான வணக்கங்கள்!

இங்கே எழுத ஆரம்பித்த நாள் முதல் எங்கள் எழுத்துக்களில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் இன்று வரை எங்களை எழுத சொல்லி ஊக்கப்படுத்தும் வாசகர்களாகிய உங்களுக்கு எழுத்தாளர்களாகிய நாங்கள் கூறும் இனிய செய்தி இது. 

ஒருவரின் கரத்தினால் படைக்கும் படைப்பே உங்களுக்கு இன்பத்தை தரும்பொழுது, எங்கள் எழுத்தாளர்கள் பலர் இணைந்து படைக்கவிருக்கும் விருந்து உங்களுக்கு பேரின்பத்தை தருமென்பதில் எங்களுக்கு எள்ளளவும் சந்தேகமில்லை... இணைந்திருங்கள் எங்கள் குடும்பத்தின் விருந்தை விழிகளால் உண்பதற்கு...
     
ஆம், நீங்கள் இதுவரை படித்த உங்கள் மனம் கவர்ந்த எழுத்தாளர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து ஒரே கதையை படைக்கும் மிகப்பெரும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.

அதாவது. வாட்பட் மற்றும் பிரதிலிபி இரண்டிலும் முதல் முறையாக ஒரே நேரத்தில் பதிவிட போகும் ரிலே ஸ்டோரி.

நீங்கள் அனைவரும் உங்களின் ஆதரவை தந்து மேலும் ஊக்கபடுத்துங்கள் நட்புகளே!.

ஜூலை 20 முதல் தினம் ஒரு எழுத்தாளரின் ஒரு பதிப்பை கொண்ட கதை தொடங்க இருக்கிறது.

கதையின் ஒவ்வொரு திரியையம் இதில் பங்குபெறும் ஒவ்வொரு எழுத்தாளரின் ஐ.டியிலும் பகிரப்படும். படித்து உங்களின் கருத்துக்களை பகிருங்கள்.

உங்கள் ஆதரவுடன் தொடங்குகிறோம்.

எங்கள் எழுத்தாளர்களின் ஒட்டுமொத்த முயற்சி பதிவிடப்படும் வாட்பட் ஐ.டி: dharshinichimba.
பிரதிலிபி ஐ.டி: எழுத்தாளர்களின் சங்கமம்

என்றும்
உங்கள் அன்பு
வாட்பட் மற்றும் பிரதிலிபி எழுத்தாளர்கள்.

என்றும் உங்கள் அன்புவாட்பட் மற்றும் பிரதிலிபி எழுத்தாளர்கள்

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.
கதிரழகிDonde viven las historias. Descúbrelo ahora