12.பிரியங்கா ராஜா

399 57 37
                                    

       நிச்சயதார்த்தத்திற்கு தேவையான துணிகளை எடுத்துவிட்டு மதிய உணவையும் வெளியிலேயே முடித்துவிட்டு இருவீட்டாருமே அவரவர் வீட்டை நோக்கி பயணமாகினர்...  எழில் அப்பாடா வீட்டிற்கு போகிறோம் என்ற எண்ணத்துடனும் பயணிக்க, இளங்கதிரோ தன்னவளின் மனதை எப்படி மாற்றுவது என்று சிந்தித்தபடியே தனது பயணத்தை தொடர்ந்தான்... இருகுடும்பங்களுமே அதீத மகிழ்ச்சியில் திளைக்க வேண்டாவெறுப்பாய் காரில் ஏறியதில் இருந்தே சலசலவென்ற ஓயாத திருமணப்பேச்சோடு வந்த தனது குடும்பத்தினரை ஒன்றுமே சொல்ல முடியாத நிலையில் கண்களை மூடி சீட்டில் சாய்ந்துவிட்டாள் எழிலழகி...

                  வீட்டு வாயிலில் கார் நின்ற அடுத்த நொடியே துள்ளிக்கொண்டு கீழே இறங்கியவள், தனது காலணிகளை திசைக்கு ஒன்றாய் கழற்றி எறிந்துவிட்டு அம்மாவிடமிருந்த இருந்த வீட்டுசாவியை பிடுங்காத குறையாய் வாங்கி கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றுவிட்டாள்...

                    தயாளனும் திவ்யாவும் என்னவோ ஏதோவொன்று ஒருவரையொருவர் வருத்தமாய் பார்த்துக்கொள்ள அகரனும், வருணாவும் தான் இருவரையும் சமாளித்தனர்...

                  “ம்மா ஹோட்டல்ல சாப்பிட்டது ஏதும் ஒத்துக்கல போல... கலக்கிடுச்சோ என்னவோ!.."என்று சிரிக்க, வருணாவும்..
   
                    “ஆமாம்மா... அப்பவே நான் சொன்னேன் எல்லாத்தையும் ஒன்னா கலந்துட்டு அடிக்காதக்கா ஒனக்கு ஒத்துக்காதுன்னு... அவ காதுலயே வாங்காம சாப்பிட்டா... இப்போ கலக்கிடுச்சு போல...” என்று ஒத்து ஊதினாள்.

பிள்ளைகளின் பேச்சில் பெற்றவர்கள் இருவரின் முகமுமே பூவாய் மலர்ந்துவிட்டது...

                      எழில் எப்பொழுதுமே இப்படி தான்... வெளியே எதுவும் சாப்பிட்டுவிட்டால் வந்ததுமே  அவசர அவசரமாய் வயிற்றை பிடித்து கொண்டு கத்திவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொள்வாள்...

ஹோட்டல் உணவுகளில் முக்கால்வாசிக்கும் மேல் அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருந்தாலும்! வாயை அடக்கிக்கொண்டும் இருக்கமாட்டாள்... எல்லாமே இந்த ஒரு ஜான் வயிற்றுக்காக தானே என்று கலந்து கட்டி ரசித்து உள்ளே தள்ளிவிட்டு தான் வருவாள்.

கதிரழகிWhere stories live. Discover now