35. ப்ரியமுடன் வி்ஜய்
"மாமா நீங்க சரியா பார்த்திருக்க மாட்டிங்க.." என்றான் அபினவ்.
“இல்லடா.. எழில் நம்ம பேசிட்டு இருக்கப்போ, இந்த கடைக்குள்ள வந்ததப் பார்த்தேன். வந்து ரொம்ப நேரமாச்சு, இன்னும் ஆளைக்காணோமேன்னு நினைச்சு தான் இங்கே வந்து பார்த்தேன். கடை முழுக்கத் தேடிட்டேன். எழிலை காணோம். அதான்” என்று படபடப்பாக கூறினான்.
“இன்னொரு முறை நல்லா தேடுவோம் மாமா. அக்கா, டிரையல் ரூம்ல கூட இருக்கலாம்ல? கொஞ்சம் தேடிப்பார்ப்போம் மாமா. இங்க தான் எங்கேயாவது இருப்பாங்க பதறாதீங்க.” என்ற அவன் வாய்மொழி தனக்கு இதமாக இருப்பதை உணர்ந்த இளங்கதிர்.
“சரி... வா இன்னொரு முறை இந்த கடைய அலசுவோம்.” என்று கூறியபடி அபினவுடன் சேர்ந்து அவனும் தேட ஆரம்பித்தான்.
இம்முறையும் தனக்கு ஏமாற்றம் மிஞ்சவே,
“மாமா. நல்லா பார்த்தீங்களா? அக்கா இதுக்குள்ள தான் வந்தாங்களா?” என்று மீண்டும் அபினவ் வினவினான்.
“ஆமா அபி.” என்று பதிலுரைத்த கதிர், எழிலின் எண்ணைத் தொடர்புக் கொண்டான். ஆனால், அது அணைத்து வைத்திருப்பதாக கம்புயூட்டர் வாய்ஸ் கேட்கவே, அவனுக்கு தர்ஷித்தின் வார்த்தைகளே நினைவிற்கு வந்தது.
‘ஒருவேளை இதுக்கு பின்னாடி, தர்ஷித்தோட சதி திட்டம் ஏதுவும் இருக்கோ?’ என்று தோன்றவே... அபினவுடன் சேர்ந்து மீண்டும் அந்த மால் முழுவதும் தேடிப்பார்த்தான். ஆனால், அங்கும் அவள் கிடைக்காமல் போகவே.... கதிருக்கு ஒரு நொடி உலகமே நின்றதைப் போன்று தோன்ற… அப்படியே மாலின் வாசற்படியில், தன் தலையை இரண்டு கைகளால் தாங்கிப் பிடித்தபடி உட்கார்ந்தான்.
கதிரின் கண்களில் கண்ணீர் தேங்கியிருப்பதைப் பார்த்த அபினவ்,
“நீங்க, அந்த தர்ஷித் பயலுக்கு கால் அடிச்சுப் பாருங்க மாமா. அவனுக்கு என்ன தான் பிரச்சனை...? விரும்பாத பொண்ண கட்டிக்க எவ்வளவு வேலைல்லாம் பண்ணுறாங்கன்னு நினைக்கும்போதே கடுப்பாகுது மாமா.” என்று தலையில் அடித்துக்கொண்டான்.

YOU ARE READING
கதிரழகி
General Fictionஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...