39. பாக்யா சிவகுமார்

262 50 9
                                    

39. Bhagya sivakumar

"ஓ..எழிலினியாள் நைஸ் நேம், சரி வா உனக்கு என்ன ஹெல்ப் வேணும்னு சொல்லு?" என்றாள் மதுரா தோழமை பார்வையுடன். 

"மதுரா சிஸ். எனக்கு உங்கள் நோட்ஸ் எல்லாம் கொஞ்சம் வேணும், அதை பார்த்து படிக்க எனக்கு சுலபமாக இருக்கும்" என்று கேட்டதும் மதுராவோ கண்சிமிட்டியபடி, 

"அட அவ்ளோ தானே? தந்துட்டா போச்சு. டோன்ட் வொரி வா போவோம்" என்று அழைத்துக்கொண்டு சென்றாள்.

எழிலினியாவின் மனதில் ஒருவித பதட்டமும் தயக்கமும் இருப்பதை உணர்ந்தாள் மதுரா.

"என்ன ஆச்சு? உனக்கு ஏன் டல்லா இருக்க?" என்று வினவியவளை ஏறிட்டு பார்த்தவள்.

"ஒன்னுமில்லை மதுரா சிஸ். எனக்கு என்னவோ போல் இருக்கு. முதலாவது ஆண்டு இது. ஸோ, காலேஜ் புதுசு. இங்கே இருக்கிற ஸ்டுடண்ட்ஸ் புதுசு. ஸோ, ஒருமாதிரி இருக்கு. ஐ மீன் எனக்குன்னு யாரும் இல்லாத மாதிரி ஒரு உணர்வு" என்று நொந்துக்கொண்டபடி ஒருவித சலிப்புடன் கூறியவளின் தோளில் கைப்போட்டப்படி,

"இனி உனக்கு நான், முகி, பாலாஜி,கதிர் எல்லாரும் இருக்கோம். அப்றம் என்ன? சந்தோஷமா இரு ஓகேவா" என்றதும் தலையை அசைத்தபடி அவளுடன் நகர்ந்தாள்.

கல்லூரி வளாகத்தில் பட்டாம்பூச்சி போல் சிறகடித்து பறந்தனர் அந்த நண்பர்கள் வட்டாரம். அவ்வப்போது அனைவரும் திரையரங்கம் செல்வது, ஷாப்பிங் செல்வது என்று தங்கள் நாட்களை இனிமையாக கழித்தனர். 

மற்றத்தோழிகளோடு இயல்பாக பழகமுடிந்த கதிரால் எழிலினியாளுடன் இயல்பாக இருக்க இயலவில்லை. அவளை பார்க்கும்போதெல்லாம் இமைகள் இமைக்க மறந்துவிட்டது போல அவளையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருப்பான். பாலாஜி கணினி பிரிவு என்பதால் அவனால் அதிக நேரம் கதிருடன் செலவிடமுடிவதில்லை.

ஆனால், மதுரா, முகில் அனைவருக்கும் அவனது மனம் நன்கு புரிந்தது.

கதிரழகிWhere stories live. Discover now