அதிக கோவம் ஒருவனை முட்டாளாக்கும்...
அதிக பொறாமை ஒருவனை குற்றவாளியே ஆக்கிவிடும்...
இரண்டுமே சேர்ந்து ஒருவன் மனதில் இருக்குமானால்...
கதிருடன் பேசிவிட்டு ஒரு சில வேலைகளை முடித்த கையோடு நேராக வீட்டுக்கு சென்ற அகரனது மனதெங்கும் ஒரே சிந்தனை 'அக்காவை தான் அத்தைக்கு பிடிக்குமே, அப்பறம் ஏன் நெருப்பு வைக்கனும்? ஒருவேளை அப்படிலாம் நடக்க வாய்ப்பு இருக்குமோ?' என்று யோசித்து யோசித்தே மண்டயை போட்டு உடைத்து கொண்டிருந்தவன், அப்படியே உறங்கியும் போனான்.
திடிரென்ற மொபைல் அலறலில் திடுக்கிட்டு எழுந்த அகரன், அதே தூக்க கலக்கத்தில் பக்கத்தில் இருந்த அலைபேசியையே பத்து வினாடிகள் கடந்தபின் தான் தேடி எடுத்தான்.
அதே சோம்பலுடன் நம்பரை கூட கவனிக்காது, காதில் வைத்ததும் கனீர் என்ற கம்பீரமான குரல் சொன்னது அதன் சொந்தகாரன் யார் என்று.
தூக்கம் சோம்பல் இரண்டுமே சென்ற இடம் தெரியாமல் போனது.
"சொல்லுங்க மாமா..." என்று மறியாதையோடும் பொறுப்போடும் அவன் பேசிய விதம் கதிரை துன்பம் மறந்து இதழ் விரிக்க வைத்தது.
'அவங்க அக்காக்கு ஒண்ணுன்ன உடனே நான் தான் காரணம்னு நினைச்சு, எப்படி எல்லாம் பேசினான்? இப்போ உண்மை தெரிஞ்சதும் மரியாதையும் தருகிறான்... நல்ல பையன் தான்...' என்று புன்னகைத்தவன்.
"டிஸ்டப் பண்ணிட்டேனா அகரன்?" என்றான்.
"அய்யோ இல்ல மாமா... சொல்லுங்க.." என்றான் அகரன்.
"ஹம்... எனக்கு எழிலோட ஜாதகம் வேணும்.. எங்க வீட்ல கேட்க முடியாது... அதனால நீ அங்க இருந்து கொண்டு வந்து தரமுடியுமா?" என்றான்.
கதிருக்கு ஜாதகம் ஜோசியம் மேல் எல்லாம் நம்பிக்கை இல்லை என்றாலும், அதை நம்பும் தம் குடும்பத்து உறுப்பினர்களின் நம்பிக்கையை பொய்யாக்கவும் அவன் விரும்பவில்லை.

VOUS LISEZ
கதிரழகி
Fiction généraleஇந்த ரிலேயில் எங்களுடன் இணைந்து எழுதும் எழுத்தாளர்கள் 1.தர்ஷினிசிம்பா (W & P) 2.ஹேமாஇன்பா(W&P) 3.ஆஷிக் (W & P) 4.வதனிபிரபு (P) 5.இதழிகா (W & P) 6.செவ்வந்தி துரை (W & P) 7.காவியா செங்கொடி (W & P) 8.SaraMithra95 (W&P) 9.நிருலெட்சுமிகேசன்(W & P) 10.ரஞ்...