10. ரஞ்சிதா சக்திவேல்

395 65 22
                                    


மாறனோடு உரையாடலையும் உணவையும் முடித்து விட்டு தனது இல்லத்தை நோக்கி புறப்பட்டான் கதிர்.

வீட்டிற்கு வந்தவன் தனிமையில் இருக்க பிடிக்காதத்தால், வீட்டின் கூடத்தில் வந்தமர்ந்தவன் டிவியை ஆன் செய்து அதில் வரும் ஒவ்வொரு சேனல்களை மாற்றி கொண்டு இருந்தாலும் அதில் கவனம் வைக்க முடியாமல்,அவனின் மனது தன்னவளை ஒரு முறை பார்க்க துடித்தது.

"ச்சே ஒரே போர் அடிக்கிது, அம்மா அப்பா வேற, ஜோசியர் வீட்டுக்கு போய்ட்டாங்க. வர லேட் ஆகும் போல இருக்கே.. அதுவரைக்கும் இப்படியே டிவி பார்த்துட்டு இருக்க முடியாது. நம்ம ராட்சசி கிட்ட பேசலாம்ன்னு பார்த்தா அவ நம்பர் கூட வாங்கலையே. இப்போ என்ன பண்றது?" என்று மோவாயில் கையை வைத்து யோசித்தவனுக்கு திடீரென்று அகரன் வந்தான்.

"அட நம்ம கிளாஸ் பையன்.. சேச்சே இல்லை இப்போ அவன் நமக்கு மச்சான் முறை. சரி மச்சானுக்கே போன் பண்ணி ராட்சசி நம்பர் வாங்குவோம்" என்றவன் உடனடியாக அகரனின் கைபேசி நம்பருக்கு அழைத்தான்.

******

சமையலறையில் இரவு உணவிற்காக பூரி மாவை உருட்டி கொண்டிருந்த திவ்யா மகளை திட்டிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தார்.

"கல்யாண வயசு வந்துடுச்சு. ஒரு வேலை செய்றாளா பாரு? எப்போ பார்த்தாலும் காலேஜ் விட்டா ட்ரெஸ் ஒரு மூலையில.. செருப்பு ஒரு மூலையில.. பேக் ஒரு மூலையில வாட்ச் ஒரு மூலையில எல்லாத்தையும் ஒரு மூலையில கெடாசிட்டு.. காலையில எழுந்து அம்மா என் வாட்ச் பார்த்தியா? பேக் பார்த்தியா? வெளிய விட்ட செருப்பை காணோம்ன்னு டெய்லி புலம்பறது.. அந்த மாப்பிள்ளை தம்பிய நினைச்சாலே பாவமா இருக்கு. இப்படி ஒன்னும் தெரியாத பொண்ணை தூக்கி என் பையன் தலையில கட்டிவச்சிட்டாங்க பாருன்னு நாளைக்கு சம்பந்தியம்மா என்னைய கேவலமா பேச போறாங்க.. என்ன பொண்ணு வளர்த்து இருக்கீங்கன்னு? ஏய் எழிலு.. எழிலு இங்க வா.." என்று மகளை திட்டி கொண்டிருக்க, அங்கு வந்த அகரனோ "அம்மா எதுக்கு நீங்க இப்படி கத்திகிட்டே இருக்கிங்க? இப்ப என்ன அக்கா இங்க வந்து சமைக்கணும் அவ்ளோதானே? அவளை கூப்பிட்டா வர போறா.." என்ற மகனின் முதுகில் பூரி கட்டையால் ஒன்று போட்டார்.

கதிரழகிWhere stories live. Discover now