22. கதிரழகி

330 51 22
                                    

கதிர் அமர்ந்திருந்த மரத்தடியில் இருந்து சற்று தூரத்தில் நேராக பெண் ஊழியர்கள் வாகனங்கன் நிறுத்தும் இடம் இருந்தது. மனதில் ஏதேதோ எண்ணங்களுடன் இலக்கின்றி பார்வை அலைய அமர்ந்திருந்தவனின் விழிகள் ஓரிடத்தில் கூர்மையுடன் பதிந்தது.. அங்கே யாரோ ஒரு இளம் ஏதோ ஒரு வண்டியில் குனிந்தபடி சற்று நேரம் நின்றிருந்தாள், பின் நிமிர்ந்து சுற்று முற்றும் வேகமாக பார்வையை ஓடவிட்டவள் கைகளை தூசி தட்டுவது போல தட்டியபடி அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தாள்.. 

வாகனங்கள் நிறுத்துமிடம், மழை வெயில் படாதவாறு இருக்க ஆஸ்பெஸ்டாஸ் கூரை போடப்பட்டிருந்தது.. மத்தியான வெளிச்சம் அங்கே உள்ளே அவ்வளவாக விழவில்லை. அந்த இடம் சற்று இருள் படிந்து காணப்பட்டது. அந்த உருவம்கூட நிழலாகத்தான் தெரிந்தது. கூடவே அவனுக்கு ஏனோ அது பரிச்சயமான யாரோ போலத்தான்  தோன்றியது.  அந்த நேரத்தில் அவள் எதற்காக அங்கே வந்தாள் என்ற கேள்வி மனதினுள் எழ விருட்டென்று எழுந்து அந்த இடத்திற்கு ஓடினான். 

அங்கே அந்த பெண் நின்ற வாகனம் தேடிப் போனவன், அவசரமாக ஆராய்ந்தவன் அங்கே கண்ட காட்சியில் அதிர்ந்து போனான். ஒரு வண்டியின் பிரேக் வயர்கள் அறுந்து கிடந்தது. அது எழிலழகியின் வாகனம். 

மனம் பதைபதைக்க, யார் செய்த வேலை? ஏன் ? அவள் இப்போதுதானே வேலையில் சேர்ந்திருக்கிறாள்.  அவள் மீது யாருக்கு பகை? யோசித்தவனுக்கு, மீண்டும் அந்த உருவத்தை மனக்கண்ணில் கொணர்ந்து பார்த்தான்.. அவன் பார்த்த பழகிய யாரோ தான் என்று புரிந்தது. இதற்கிடையில் அவனுக்கு அடுத்த வகுப்பிற்கான மணி அடிக்கவும்,  கைப்பேசியில் மாறனை விளித்து," டேய் மாறா, நீ என்ன பண்ணுவியோ தெரியாது.. இன்னிக்கு நீதான் எழிலை அவள் வீட்டில கொண்டு போய் பத்திரமா விட்டுட்டு அப்புறமா தான் உன் வீட்டுக்குப் போறே.." என்றதும்.. 

"ஏன் அண்ணா? அவள் அவள் இன்னிக்கு வண்டி கொண்டு வரலையா? என்றான்.. 

"அதெல்லாம் இப்ப சொல்ல நேரமில்லைடா.  நீ நான் சொன்னதை மட்டும் செய், எனக்கு கிளாஸ்க்கு நேரமாச்சு என்று  பேச்சை முடித்துவிட்டு ஆசிரியர்களுக்கான அறையை நோக்கி 
விரைந்தான் கதிர். 

கதிரழகிTempat cerita menjadi hidup. Temukan sekarang