3.ஆஷிக்மோ

610 80 62
                                    

எழிலழகிக்கு இன்றைய நாள் ஆரம்பித்தது முதல் இந்த நிமிடம் வரை அவளுக்கு சாதகம் இல்லாமலே சென்று கொண்டிருக்க, இறுதி நிமிடங்கள் அவளுக்கு சாதகமாக அமையும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.

" மிஸ் எழிலழகி, உங்கள டீன்  ரூமுக்கு வர சொன்னாரு" என்று கூற மாறனின் முகம் அஷ்ட கோனலாகியது. என்னதான் அவன் இந்த காலேஜ் உரிமையாளரின் மகனாக இருந்தாலும் காலேஜ் வேலைகளில் அவன் தலையிடுவதில்லை.

எழிலழகியும் மாறனும் ஒரே காலேஜிலேயே எம் எஸ் சி கம்ப்யூட்டர் சயன்ஸ் படித்தனர். சுமோ என்று எல்லோராலும் பட்ட பெயர் கொண்டு அழைக்கப்படும் மாறனுக்கு வாழ்க்கையில் மிகவும் பிடித்தது சாப்பாடு. அதற்கு அடுத்து கம்ப்யூட்டர். அதற்கு அடுத்து எழிலழகி.

ஆம். எழிலழகி மீது அவனுக்கு காதல்.  ஆனால் அவனுக்கும் தெரியும், தான் அவளை காதலிப்பதாக கூறினால் உலகமே அவனை பார்த்து கை கொட்டி சிரிக்கும் என்று. இருந்தாலும் தன்னை ஒரு கோமாளி போல அவள் முன் காட்டிக்கொண்டு குறைந்த பட்சம் அவளுடன் நேரத்தையாவது செலவு செய்யலாம் என்பதே அவனின் எண்ணம்.

எழிலழகி சிஸ்டம் அட்மின் வேலைக்கு விண்ணப்பித்த போது இந்த காலேஜில் மாறன் தான் சிஸ்டம் அட்மின். மாறன் சாப்பாட்டில்
எப்படி புலியோ அதே போல கம்ப்யூட்டர் வேலைகளில் வேங்கை. அதனால்தான் அவனால் ஒரு சிறிய டீமை வைத்து காலேஜின் சிஸ்டம் வேலைகளை செய்ய முடியுமாக இருந்தது. ஆனாலும், எழிலழகி அவனிடம் தனக்கு ஒரு வேலை வேண்டும் என்பதை கூற, இல்லாத வேலையை இருப்பதாக காட்ட இன்னுமொரு சிஸ்டம் அட்மின் வேலை உருவாகியது. இல்லை மாறனே உருவாக்கினான்.

டீனின் அறைக்குள் எழிலழகி செல்ல அங்கு மாறன் தனித்து விடப்பட்டான். அவனின் முகவாட்டத்தை கண்ட இளங்கதிர்

" என்ன மாறா, சாப்பாட்டுக்கு பார்ட்னர் இல்லைன்னு கவலையா?" என்று கேட்க அவன் " பார்த்தீங்களா சார். உங்களுக்கும் என்ன பார்த்தா காமடியா இருக்குள்ள" என்று கூற இளங்கதிருக்கு அப்படி கேட்டது தவறோ என்று தோன்றியது.

கதிரழகிTempat cerita menjadi hidup. Temukan sekarang