COPYRIGHT WARNING!!!
முக்கிய குறிப்பு !எஸ்.ஜோ அல்லது எஸ்.ஜோவிதா எனும் பெயரில் வரும் எல்லா நாவல்களும் இந்தியா – பிரான்ஸ் உட்பட 262 நாடுகளில் COPYRIGHT பெற்ற நாவல்கள்.
எனவே எந்த நாவலையும் ஆசிரியரின் அனுமதி இன்றி பிரதி எடுக்கவோ, அச்சு எடுக்கவோ,
வேறு எந்த இணையத்தளத்திலாவது பிரசுரிப்பது சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மீறுவோரின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.அருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022
மிக விரைவில்..!நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்குறாய்... !
முன்னுரை :
வணக்கம் வாசக நட்புகளே !
எனது ஒரு நாவலான நிலாவே வா நாவலில் நாயகனுக்கும், நாயகிக்கும் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை உரையாடல்களே இல்லாது, நகர்ந்து சென்று அந்த நாவல் பலரால் பேசப்பட்டது. விரல் விட்டு எண்ணும் அளவுக்கே அவர்களுக்கிடையேயான உரையாடல்கள்.
நாயகன் நாயகி பேசிக்கொள்ளமாலே சிறப்பாக நாவல் எழுத முடியும், என அன்று என்னை பாதித்த கரு ''நிலாவே வா'' வை உருவாக்கியது.
''நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்குறாய் ... !''
கதை கரு. நான் கண்கூடாக பார்த்து என்னை பாதித்த ஒரு கரு. அழுத்தம் தரவைக்கும் கரு கொண்ட நாவல். ஆனால் முழு நீள நாவலாகிடாதவாறு நிறைய சம்பவங்களை துண்டித்து முடிந்தவரை சுருக்கி உள்ளேன். இது எனது எல்லா நாவல்களையும் விட கொஞ்சம் அழுத்தம் என்று சொல்லவா? முற்றிலும் என் வண்ணத்தின் மாறுதல் என்று சொல்லவா?
இந்த நாவலில் பல இடங்களில் நாயகி பேசுவது எல்லாம் அவளது மனதுக்குள்ளும், மனட்சாட்சியுடனும் தான். சில இடங்களில் நாயகனும் சில கதாபாத்திரங்களும் அவர்களுக்குள் பேசிக்கொள்வதாக வரும்.
நம்மில் பலர் நாம் நினைப்பதை எல்லாம் வாய் விட்டு சொல்லிவிடுகிறோமா? இல்லை பேசித்தான் விடுகிறோமா? நம்மால் முடியாது அல்லவா? அதே நேரம் நமக்குள் பேசிக்கொள்வோம் அல்லவா? அந்த வகையில் இதில் வரும் நாயகி தாரிகா அவளது மனக்குமுறல்களை அவளுக்குள் பேசிக்கொள்வதாக வரும்.
படிக்கும் போதே நீங்களும் மனதுக்குள் என்னை நினைத்து முணுமுணுத்துக்கொள்ளுங்கள்.
வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல்.
வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலாச்சாரத்தில் ஊறிய நாட்டு மக்களின் கருத்துக்களை அப்படியே படம் பிடித்து காட்டும் கதை...
நாயகன் ஆர்ஷன் வெளிநாட்டில் பிறந்தவன். புத்தகமா வாங்கி படித்த அத்தனை பேரின் இதயத்தையும் கொள்ளை கொண்டு போனவன்..எனது நாவல்களிலியே பல பாராட்டுகளும் கிரீடம் பொறிக்க வைத்த ஒரு நாவல்..இங்கு பதிவேற்றம் மிக விரைவில்
நன்றிகள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...