நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 75

385 10 0
                                    

75

தாரிகாவும் எழுந்து புடவையை மாற்றியவள்.

''விடிந்து இருக்குமா? என கணக்கு போட்டு பார்த்தவள் மெசேஜ் போடவா? கால் பண்ணவா?'' நகத்தை கடித்தவாறு யோசித்தாள்.

பல நாட்களுக்கு பின் அவனுக்கு அழைப்பை விட தயக்கமாக இருந்தது. குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள். பின்

''என் புருஷன்! என் வாழ்க்கை ! என் விஷயத்தை நான் பேசாது யார் பேச போறா?'' என முடிவு எடுத்தவள் ''can you call me?'' என மெசேஜ் அனுப்பிவிட்டு அதையே உற்று பார்த்தவாறு இருந்தாள்.

ஆர்ஷன் ஆரனின் விஷயமாக பிசியாக  இருந்தான். மொபைல் தூக்கவே நேரம் இல்லாது ஓடிக்கொண்டிருந்தான்.

தாரிகாவுக்கு இரவு ஆகியும் ஒரு பதிலும் இல்லை. இரவு உணவு இறங்கவே மறுத்தது.  படபடப்பான மன நிலையில் இருந்தாள்.

''பார்த்தும் பாராதது போல இருக்கிறானே. டேய் நிஜமாகவே என்னை தூக்கி போட்டுவிட்டாயா?''  தப்பு பண்ணிட்டேன்தான் ஒத்துக்குறேன். பெண்ணாக பிறந்தாலும் பொறுமை இல்லாது துள்ளியது தப்பு தான். நான் பேசி கேட்க ஆசையாக காத்திருந்தாயே.. இப்போ நீ பேச நான் தவம் இருக்கேனே. எனக்கு நீ வேணும்! உன்கிட்டே நான் பேசணும்! ப்ளீஸ் என்னை தவிக்க வைக்காதே ! சீக்கிரமா மெசேஜ் பார்த்துட்டு கால் பண்ணுடா'' தாரிகா மொபைலை பார்த்தவாறு பேசியது அவனுக்கு கேட்டு இருக்க வேண்டும். அவள் தூங்க முன்பு எடுத்தான்.

தாரிகா சட்டென்று எடுத்து காதில் வைத்தாள்.
''ஹாய்'' என்றது அவனது குரல். இவள் காதுக்குள் கொட்டும் பனிதூவல்கள் உச்சி மண்டையில் விழும் போது ஏற்படும் ஒரு சிலிர்ப்பு. பனிதூவல்களுக்கு சிறகு முளைத்து அவளின் உடல் முழுதும் அந்த சிறகால் வருடி, வருடி அவளது நரம்புகளை இழுத்து கோர்த்து நர்த்தனம் ஆட வைப்பது போல ஒரு சிலிர்ப்பு.

''எப்படி இருக்கீங்க?'' என கேட்டது  அந்த குரல்.

''எந்த குரல் கேட்டால் வாந்தி வருது என சொன்னாளோ?'' அதே குரல் செய்யும் மாயத்தால் தன்னை மறந்து நின்று இருந்தாள்.  அவனோ அவளிடமிருந்து பதில் வராது போக பெருமூச்சு விட்டவனாக, அவள் விவாகரத்து விஷயமாக பேசத்தான் எடுத்து இருக்கிறாள் என எண்ணியவன்,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora