38
ஷாப்பிங் காம்பளாக்ஸ் வந்து இறங்கவும் எமிலியா எதிர் கொண்டாள். ஆர்ஷனை மேற்கத்திய முறையின்படி கட்டி தழுவி நலம் விசாரிக்க, தாரிகாவோ சினிமாவிலும், தோழிகள் சொல்லியும் கேள்விப்பட்டு இருக்கிறாளே தவிர நேரில் இப்படி ஒரு இறுக்கமான அன்பு பரிமாறலை கண்டது இல்லை என அவள் விழிகளின் அதிர்வு சொல்லியது. என்னதான் நவ நாகரீகமாக உலகம் மாறி போய் இருந்தாலும், அதிலும் ஆர்ஷனின் கைகள் இருந்த இடமும் எமிலியாவின் நெருக்கமும் இவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது.மணம் முடிக்க இந்தியா போன தோழனை பார்த்த சந்தோஷத்தில் விகல்பம் இல்லாது சிறு வயதிலிருந்து அப்படி அன்பையே பரிமாறி பழகிய இருவருக்கும் ஏன் அந்த நாட்டில் பிறந்த எவருக்கும் அது தப்பாக தோன்றாது. ஆனால் தாரிகாவின் வளர்ப்பு முறையும், பிறந்த இடமும் தப்பாகவே தோன்ற வைத்ததில் ஆச்சர்யம் இல்லை.
சில விஷயங்களை சில நாட்டவர்கள் இன்னும் ஜீரணிக்க முடியாது திணறத்தான் செய்கிறார்கள். அந்த வகையில் தாரிகாவும் விதி விலக்கு அல்ல என நிரூபித்தாள்.
''She is Emy ! நான் சொன்னேன்லே மை ஸ்வீட் பிரண்டுன்னு ? தட் கேர்ள்'' என அறிமுகம் செய்தான் ஆர்ஷன். எமிலியாவும் அதே முறையில் தாரிகாவை கட்டியணைத்து அன்பை பரிமாறினாள். தாரிகா வரவழைத்துக்கொண்டு முக சிரிப்புடன்,
''ஹாய்'' என்று சொன்னவளுக்கு பதிலுக்கு ''ஹாய்'' என்றாள். அவளை அளவெடுத்தவளுக்கோ,
'இப்படி சினிமா ஸ்டார் போல ஒரு சுவீட்டாம் சுவீட் பிரண்டு வெள்ளைக்காரியா இல்லை விளங்காத கலவையா ? வைச்சு இருக்குறவனுக்கு என்னை ஏன்யா கட்டி வெச்சே ? ..நான் இந்த நூற்றாண்டிலும் பட்டிக்காட்டுத் தனமாகவே இருந்துட்டு போயிருப்பேன். இந்த நவநாகரீகத்தோடு ஓட்ட முடியாது...நீயும் என்னை நவ நாகரீமாவா வளர்த்தே ? கட்டுப்பட்டியா வளர்த்து கண் காணாத தேசத்துக்கு பார்சல் பண்ணிட்டு.. எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு' தந்தையை மனதுக்குள் திட்டி தீர்த்தாள்.

ESTÁS LEYENDO
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...