நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 72

418 8 0
                                    

72

நாட்கள் நகர, நகர, தாரிகா எவ்வளவு மனதிடமான ஆளாக இருந்தாலும், தைரியமாக முடிவு எடுக்கும் நிலைக்கு வந்து விட்டு இருந்தாலும், அவளை பலவீன மடையவே வைத்தது அவளை சுற்றி இருக்கும் சூழல்கள்.

ஆபீஸ் போனாலும் வழக்கம் போல் அடுத்தவர்களின் விஷயத்தில் மூக்கை நீட்டி, மோப்பம் பிடித்து, அதை நான்கு மடங்காக  திரித்து பரப்புவதற்கு என்று எந்த காலத்திலும் ஒரு கூட்டம் இருக்கும். என்பதை நிரூபித்த வண்ணம் இருந்தார்கள்.
அவளின் வேலை செய்யும் இடத்து சில ஊழியர்கள்.

அவள் விவாகரத்துக்காக காத்திருக்கும் ஒருத்தி, அதுவும் வெளிநாட்டுக்காரனை கல்யாணம் செய்து கொண்டு போனவள் என்றதும், இன்னும் அவர்கள் வாய்க்கு மென்று துப்ப அவர்களது கற்பனை சக்திக்கு எல்லை இல்லாது போனது.

''பாரின் காரன் என்றதும் பல்லை காட்டிவிடுவாளுக. அவனுக அங்கே கொண்டு போய் வெச்சு இருக்குற வெள்ளக்கார அம்மணிக்கு கால் அமுக்கி விடு! என்று வேலைக்காரி வேலை பார்க்க சொல்லி இருப்பான்'' என ஒரு சாராரும்,

''அவனுக்கு ஏற்கனவே அங்கே பொண்டாட்டி புள்ளைங்க இருக்காம். இவளை அவர்களுக்கு வேலை செய்ய தான் அழைச்சுட்டு போனானாமே. அதான் போன வேகத்துல ஓடி வந்துட்டா போல'' என்று ஒரு தரப்பும்,

''நீ வேற ! அவன் இரவு பகலாக குடியும், கூத்தும், வெள்ளக்கார குட்டிகளுமா வீட்டுல கொட்டம் அடிச்சுகிட்டு இருந்திருப்பான். இவ சொல்லி பார்த்திருப்பா, அவன் போடி நீயும் வேண்டாம் உன் உடம்பும் வேண்டாம்ன்னு அடிச்சு விரட்டி
இருப்பான்'' என ஒரு சாராரும்,

''அப்படியா சொல்றே ? அப்போ பாரின் மாப்பிளைகள் அப்படித்தான் இருப்பானுகளா?'' ஒரு நடுத்தர வர்க்கம் ஆச்சர்யமாக கேட்டது.

''பின்னே அவங்க எல்லா மேட்டரிலும் கரை கண்டவங்க...பார்க்கத்தான் வெள்ளையும், சொள்ளையுமா இருப்பாங்க. ஆனா படா டேஞ்சர் பார்ட்டிங்க ...''ஒரு இளரத்தம் சர்டிபிகேட் கொடுத்தது .

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOù les histoires vivent. Découvrez maintenant