நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 88

706 13 0
                                    

88

லண்டன் திரும்பியதும் ஆர்ஷனுக்கு நிறைய வேலைகள் குவிந்திருந்தன. அதை எல்லாம் பின்னுக்கு தள்ளிவைத்து விட்டு மனைவியின் மேற்படிப்பு சம்பந்தமாக அவள் பாதியில் விட்ட வகுப்புகள், டிரைவிங் வகுப்புகள், என அவளது எதிர்கால முன்னேற்றத்துக்கு வழி வகுத்து கொடுப்பதில் தீவிரம் காட்டினான்.

எமிலியாவும் ''பார்த்துக்கொள்கிறேன் நீ அரேஞ்மெண்டுகள் முடிந்து ரிலாக்ஸ்சா வா'' என்றதும் ஆர்ஷனும் மைண்டில் மனைவியின் எதிர்காலமே ஒரே நோக்கமாக அதை நோக்கி நடவடிக்கைகள் எடுத்தான் .

தாரிகாவும் கணவனது ஊக்கத்தில், அவன் பின்னால் இருக்க, அவன் கொடுத்த உற்சாகத்தில் நிர்வாகம் சம்பந்தமான கல்வி துறையில் சேர்ந்து படித்தாள்.
குளிரை நேசிக்க தொடங்கினாள். அந்த நாட்டை விரும்ப ஆரம்பித்தாள். தான் வாழ போகும் வீட்டினை தனது ரசனைக்கு மாற்றினாள். காதல் கணவன் அருகில் இருக்க பிடிக்காதது எல்லாம் சொர்க்கமாக மாறி போனது.

எல்லா ஒழுங்குகளையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தவன் வீட்டுக்குள் நுழைந்தவன், தலையை துவட்டியவாறு பற்கள் தந்தியடிக்க வந்த மனைவியை ஏறிட்டான்.

''ஹேய் பேபி எனக்கு இப்போ புரியுது ஏன் நீ அடிக்கடி உடம்புக்கு முடியாம போறேன்னு'' கடிந்தவாறு ஈரம் சொட்டும் கூந்தலை ஹேர் ட்ரையர் கொண்டு காய வைக்க முயற்சித்தான்.

''ஆர்ஷ் என்ன இன்னிக்கு மைனஸ் ஒண்ணுக்கு இந்த குளிர் குளிருது? நேத்து மைனஸ் அஞ்சுக்கே குளிரல''

''அது அப்படித்தான் பேபி! நம்பரை வைச்சு கணக்கு போடாதே! ஹீட்டரை கூட்டி விட்டா போச்சு'' என்றவன் அதை கூட்டிவிட்டான்.

''உஸ்ஸ் ஆனாலும் எனக்கு இந்த குளிர் பழக்க படுத்த காலம் எடுக்கும்பா'' என்றாள் உடலை உதறியவாறு. ஆர்ஷன் சிரித்தவாறே,

''குளிருக்கு சூப்பரான போர்வை இருக்கு. பட் நீதான் not ready baby'' என அவள் கன்னத்தில் தட்டிவிட்டு குளிக்க போனான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now