நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 11

403 8 0
                                    

11
விமானம் பாங்க்காக் வந்து இறங்கியது.

''கனடா என்றுவிட்டு தாய்லாந்து ஏன் ?'' என கேட்டவனை முறைத்தான் கூடவே வந்தவன். அங்கு வேறு ஒருவனிடம் இவனை ஒப்படைத்துவிட்டு மாயமாகிப் போனான் அவன்.

''அப்பா கனடாவில் கால் வைத்துவிட்டேன் என்று சந்தோஷ சேதி சொல்வான்'' என காத்திருந்தவருக்கு.

''பாங்க்காக் சிறைக்கு கொண்டு போக போறாங்கப்பா... எனக்கு பயம்மா இருக்குப்பா நான் இந்தியா திரும்பிடுறேன்னு சொல்லிட்டேன்பா...சைன் வைக்க சொல்றாங்கப்பா...பனிஷ்மென்ட் மோசமா இருக்கும்ன்னு மிரட்டுறாங்கப்பா... என்னோட ஆசை, கனவு, எல்லாம் போச்சுப்பா... போச்சு.. நான் சிறையிலே செத்துடுறேன்'' என கதறினான்.
சண்முகவேல் குடும்பம் கதி கலங்கி போனது.

சண்முகவேல் தைரியம் சொல்லி கடனுக்கு மேல் கடனும் பட்டு, அருணின் உதவியால் கொஞ்சம் வக்கீல்களை வைத்து தருணை இந்தியா மீட்டு எடுத்தார். சாவித்திரி அத்தனை கடவுள்களையும் வேண்டிக்கொண்டாள்.

தர்சனாவோ'' வெளிநாடும் வேண்டாம் ! ஒன்றும் வேண்டாம் ! நீ வந்து சேரு'' என்றாள்.

தாரிகாவோ தலையில் அடித்தாள். ''உள்ளூரில் ஓணான் பிடிக்க தெரியாதவன் உலகம் சுத்தி ஓணான் தேடி போனானாம்'' அவள் திட்டி தீர்த்தாள்.

ஒருவாறு திரும்பி வந்தான். நிம்மதி மூச்சு விட்டார்கள். ஆனால் அது நிலைக்க முதல் வட்டிக்கு வாங்கிய ரொக்கம் என்னைப்பார் ! நான் வளர்கிறேன் என கொக்கரித்தது. எந்த நம்பிக்கையில் திருப்பி தருவேன் என்று சொன்னாரோ, அது பொய்யாகிப் போனதில் சண்முகவேல் திணறிப்போனார்.

தருணும் வேலை தேடுறேன் என நாட்களை கடத்தி கொண்டு இருந்தான். வட்டி கட்ட வழி இல்லை என்றானது. வாசுதேவன் வட்டிப்பணத்துக்கு வந்து நிற்க சண்முகவேலுக்கு விழி பிதுங்கியது. முதல் மாத வட்டிக்கு தர்சனா தனது கை இருப்பை கொடுக்க, தாரிகாவின் கழுத்தில் இருந்த ஒரே ஒரு செயினும் போனது.

கடன் வாங்கி வட்டிப் பணம் கட்ட வேண்டிய நிலை வர போகிறது என சண்முகவேலுக்கு தெள்ளத்தெளிவாக புரிந்தது. அடமானம் வைக்க ஏதும் இல்லை பலவாறு சிந்தித்தவாறு அவர் தனது நிலையினை நண்பர்கள் மத்தியில் புலம்பிய போது முத்து தான் மீண்டும் உதவிக்கு வழி காட்டினார்.

''நான் வேலை செய்யும் கம்பெனியில் ஏற்றுமதி, இறக்குமதி பிரிவுக்கு கணக்கு உதவியாளராக ஒரு ஆள் தேவைன்னு போர்டு போட்டு இருக்காங்க. உன் பையனை போக சொல்லு. சம்பளம் எல்லாம் எந்த வித பிரச்சனையும் இல்ல'' அவர் சொல்ல,

''தருண் படிச்ச படிப்புக்கு கணக்கு எழுதுவதா'' ? என யோசித்தார்.

''என்ன பையனை கணக்கு எழுத வைக்க யோசிக்குறியா? இத பாரு சண்முகம்..அவன் அவனோட தகுதிக்கு வேலை தேடி வரும் போது இதை விடட்டும்...அதுவரை உன் குடும்பத்து சுமையை குறைக்க உதவியாக இருக்கட்டும்..அவனால் தானே இவ்ளோ சுமை உனக்கு சேர்ந்து இருக்கு ?'' முத்து எடுத்து சொன்னதும் தலையாட்டியவாறு சிந்தனையுடன் வீடு நோக்கி புறப்பட்டார்.

சிந்தித்தவாறே வந்தவர் தருணை பார்த்து விஷயத்தை சொன்னார். அவனோ என்னவோ கேட்க கூடாத ஒன்றை கேட்டவன் போல ''தாம் தூம்'' என்று குதித்தான்.

''என்னை போய் கணக்கு எழுத சொல்றீங்களா ? எனக்கு என்ன தலையெழுத்தா? பாரின் போய் எப்படி முன்னேறலாம் என்று கனவு கண்டுட்டு இருப்பவனை எதுக்கு இங்கே அடக்கி வைக்க பார்க்குறீங்க?''

''இத பாரு பாரின் வேலை வரும் போது வரட்டும் ! முதலில் ஏதாச்சும் ஒரு வேலையில் சேரப்பாரு'' அருண் இடையில் குறுக்கிட்டு சொன்னான்.

''அண்ணா ஒன்னு செய்யேன்... நீ பார்த்துட்டு இருக்கும் வேலைய எனக்கு கொடுத்துடு ! நீ வேணா இந்த கணக்கு எழுதும் வேலையை செய்யேன்'' என்றான் பெரியவனுக்கு திருப்பி பதிலடி கொடுத்து. வத்ஸலாவுக்கு கோபம் வந்தது.

''என்ன தம்பி பேசுறீங்க? அவருக்கு என்ன தலை எழுத்து? படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலை செய்யாம கணக்கு எழுத?'

''அப்புறம் நான் மட்டும் எப்படி அண்ணி அதை செய்வேன் என்று எதிர் பார்க்குறீங்க? ''

''உங்களுக்காக தான் மாமா கடன் பட்டு இருக்கார். நீங்கதான் அடைச்சாகணும்'' வத்ஸலா குரலில் கோபம் குறையாது கேட்டாள்.

''அண்ணி ! நானா மாட்டேன்னுறேன் ? என் கனவு வேறு...'' அவன் தனது பிடியில் ஒரே பிடியாக பிடித்துக்கொண்டு நிற்க.

சண்முகவேலுக்கு மகனை வற்புறுத்த மனது இடம் கொடுக்கவில்லை. சாவித்திரிக்கு சொல்லெணா கோபம் வந்ததது. கணவன் முன்னால் மகனை எதுவும் சொல்லி விட முடியாது அது விழலுக்கு இறைத்த நீர் என அறிந்தவளாகையால். அவனை தனியாக ஒரு பிடி பிடிக்க காத்திருந்தாள்.
(...)

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ