33
ஆர்ஷனை சுற்றி மாறன், தருண், அருண் பேசியபடி இருக்க, கீழே சமையல் கட்டில் பெண்கள் இருந்தனர். மொட்டை மாடியில் ஒரே சிரிப்பும், சத்தமுமாக வர தாரிகா எரிச்சலாக முழங்காலில் இருந்து தலையை தூக்கி பார்த்தாள்.
''என்னை தவிர எல்லாருக்கும் கொண்டாட்டமாகத்தான் இருக்கு'' கறுவினாள்.
சாவித்திரி மகள் ரொம்ப நேரமாக அறைய விட்டு வராததால் வத்ஸலாவிடம் கண்ணை காட்டினாள். அவள் தோசைக்கு அரைத்த சட்டினியை வைத்து விட்டு கைகளை துடைத்தவாறு நாத்தனாரை தேடி போனாள்.
தாரிகா அமர்ந்திருந்த விதம் பார்த்தவளுக்கு பெருமூச்சு ஒன்று தானாக வந்து சேர்ந்து கொண்டது.
''தாரு ! எல்லோரும் சந்தோஷமாக இருக்க நீ என்னம்மா தனியா இங்கே முடங்கிட்டு?'' என அவளது குரல் வர தலை தூக்கி பார்த்தாள். அது இறுகி போய் கண்கள் சிவந்து போய் இருந்தது. வத்ஸலா அவளருகே வந்து கன்னத்தை வருடியவாறே,
''உன் முகத்தை வைத்தே சொல்றேன் உங்களுக்குள்ளே எதுவும் நடக்கல. அப்படி பார்க்க போனா உன் அனுமதி இல்லாமல் உன்னை தொட கூட விரும்பவில்லை மாப்பிளை பையன் என்று புரிகிறது''
''என்ன அண்ணி மாப்பிளை மகானுக்கு சர்டிபிகேட் தர போறீங்களா பக்கா ஜென்டில்மேன்ன்னு ?'' கிண்டலாக கேட்டாள் சிறியவள்.
''பார்த்தியா நீயே மறைமுகமாக ஒத்துக்குறே ?'' வத்ஸலா சொல்ல தாரிகா எரிச்சலாக,
''ஜென்டில்மேனாக இருந்தால் மட்டும் போதாது அண்ணி! ஜென்மத்துக்கும் புடிக்கணும் ... இவன் தான் என் மூச்சுன்னு உணரணும்... இவன் கூடத்தான் என் வாழ்வும், சாவும்ன்னு நரம்புகள் எல்லாம் கட்டுக்குள் நிக்காது ஆடணும்.. கருமம் அவன்கிட்டே ஒரு இழவும் எனக்கு வரமாட்டேங்குது.. என்ன கொடுமை ? எங்கே போய் சொல்லுவேன் ?'' அவள் குமுறினாள்.
''தாரு ! பேசி செய்த கல்யாணம் இல்லையா ? அது எல்லாம் உடனே வந்திடுமா? பார்த்து, பழகி, புரிஞ்சுகொண்டு மெல்ல, மெல்ல'' வத்ஸலா தொடங்க,
![](https://img.wattpad.com/cover/317550114-288-k835589.jpg)
VOUS LISEZ
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Roman d'amourஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...