நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா -4

594 13 0
                                    

4

ஆரன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தாலும் தானும் தம்பி போல ஒரு தொழிலில் இறங்க வேண்டும் என பொறுப்பானவனாக மேனேஜ்மென்ட் கன்சல்டிங் கம்பெனி ஆரம்பிக்க போறேன் என வந்து நின்றான்.

எல்லோரும் ''திரும்பி வந்திட்டானோ?'' என சந்தோஷமடைந்தார்கள். மகிழ்ச்சியுடன் ஆர்ஷனும் அண்ணனுக்கு உதவி செய்ய, மனோகரும் பக்க பலமாக இருக்க, நன்றாக ஆரம்பமானது.

ஆர்ஷன் பல தரப்பட்ட நிறுவனங்களை அண்ணனின் கம்பெனிக்கு வாடிக்கையாளர்களாக எடுத்து கொடுத்தான். மனோகரும், சுபத்திராவும் பிள்ளைகள் இருவரும் பிசினஸில் சிறந்து விளங்குவதை பார்த்து பூரிப்படைந்தார்கள். பெரியவனும் பொறுப்பாக இருப்பதை பார்த்தார்கள். அவனுக்கு வரன் தேட தொடங்கினார்கள். ஆனால் அவனுக்கு ஒன்று தேடியே வந்தது சூறாவளியாக.

தனது பேஷன் கம்பெனிக்கு கன்சல்டிங் கேட்டு வாடிக்கையாளராக வந்தாள் கரோலின். ஆரனின் வாழ்க்கையையே மாற்றி போட்டாள். பத்தில் ஒன்றாக வந்த கிளையண்ட் மொத்தமும் அவளாகி போனாள். அவளிடம் வீழ்ந்தே போனான் ஆரன். அளவுக்கு மீறிய வனப்பும், மிதப்பும், கண்களில் கவர்ச்சியும், உதட்டில் தேனையும், பேச்சில் வசீகரத்தையும் கொண்டவளிடம் தன்னை பறிகொடுத்தான்.

விளைவு முற்றிலும் அவளிடம் தன்னை தொலைக்க பெற்றவர்களை தம்பியை மறக்க செய்தது அவளுடனான உறவு. அவள் இழுத்த இழுப்புக்கு எல்லாம் பொம்மையாகி போனான். கொஞ்சம், கொஞ்சமாக குடும்பத்தை விட்டு விலக வைத்தாள். சொத்து உள்ளவன், அழகிலும் குறையில்லாதவன் தனது தொழில் முன்னேற்றத்துக்கு அவனது காதலை தனக்கு சாதகமாக்கி கொண்டாள். சேர்ந்தே வாழவும் தொடங்கிவிட்டான்.

சில நாள் BAR, சில நாள் கிளப், சில நாள் உல்லாச சுற்று, சில நாள் தொழில்கள் என்றானது. ஏற்கனவே ஆரன் உல்லாச பேர்வழி. வந்து சேர்ந்தவளும் அவ்வாறே ஆகிப்போக, அவனுக்கோ சொர்க்கலோகத்தில் கூட இப்படி ஒரு வாழ்க்கை இராது என தோன்றியது. மாறிவிட்டான் என நினைத்துக்கொண்டிருக்க, பெற்றவர்களுக்கு காதில் காரசாரமாகவே எல்லாம் வந்து மோதின.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOù les histoires vivent. Découvrez maintenant