நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 85

471 10 0
                                    

85

மனோகரின் பிறந்த வீடு,

அவரது குடும்பத்துடன் சண்முகவேல் குடும்பமும் சேர்ந்து களை கட்டி இருந்தது. ஆர்ஷனும் தாரிகாவும் கோயிலால் திரும்பியிருந்தார்கள்.

தனது குடும்பம் முழுதும் அங்கே குழுமி இருந்து எல்லோரும் அவர்களுடன் சகஜமாக பேசிக்கொண்டிருப்பதை பார்த்த தாரிகா மனது சொல்ல முடியாத பாரம் இறங்கியது போல உணர்ந்தாள்.

கணவனின் குடும்பத்தின் பெருந்தன்மையை மேலும் எண்ணி வியந்தவளாக அருகே போனில் பேசியபடி வந்தவனை நிமிர்ந்து பார்த்தாள்.

நடந்து கொண்டிருந்த மனைவி நின்று தன்னை பார்ப்பதை கண்டவன் அழைப்பை துண்டித்து விட்டு,
''வாட் பேபி இந்த லுக்கு ? என்னோட பிரெஞ்சு கிஸ் வேணுமா ?'' அவன் குனிந்து கேட்க முகம் சிவந்தவள்,

''ஆர்ஷு தள்ளி போப்பா !'' என அவனை விரல் கொண்டு தள்ளி விட்டு,

''காதலோடு ஒரு பார்வை பார்க்க முடியல'' என முறைத்தாள்.

''நீ பார்க்க எனக்கு போர்னில் எலெக்ட்ரிக் பாயுதே பேபி !'' என அவன் அருகே வந்து இடையை பற்றி தூக்க முற்பட்டான். அவள் சட்டென்று விலகி முன்னே ஓடியவளாக திரும்பி,

''டேய் அடி வாங்காதே !' விரல் நீட்டி எச்சரித்தாள். அவனோ குறும்புடன் எட்டி தூக்குவது போல பாவ்லா செய்தான்.

''ஆர்ஷு வீடு வந்தாச்சுப்பா! எல்லாரும் வந்து இருக்காங்க'' என சொல்லிவிட்டு நடையின் வேகத்தை கூட்டி உள்ளே நுழைந்தாள்.

ஆர்ஷன் மனைவியை ரசித்தவாறு பின் தொடர்ந்தான்.

திருமணமானதுக்கு இன்று தான் அத்தனை பேரும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடன் இருந்தார்கள் எனலாம்.

பெண்கள் எல்லோரும் மதிய விருந்து தயாரிப்பதில் மும்முரமாக இருந்தார்கள். ஆண்கள் வெட்டி கொடுப்பதை வெட்டுவதிலும், சுத்தம் செய்வதுமாக இருந்தனர்.

அந்த பெரிய ஹால் கண் கொள்ளா காட்சியாக இருப்பதை பார்த்த தாரிகா கூடவே தானும் அவர்களுடன் அமர்ந்து உதவி செய்ய முனைந்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora