நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 57

373 10 0
                                    

57

தாரிகா மனதை அமைதிப்படுத்த படாது பட்டாள். ஏதாவது புத்தகம் படிக்கலாம் என அவளது அறைக்கு அருகில் இருக்கும் மினி லைப்ரரிருக்கு வந்து அமர்ந்தாள். எதிலும் மனது அமைதியாகவில்லை. அது இனி அமைதி கொள்ள போவதுமில்லை என தெரியாதவளாக சும்மா ஒரு புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிக்கொண்டிருந்தாள்.

ஆர்ஷன் அவள் இருந்த இடத்துக்கு வந்து கதவை தட்டி விட்டு நிற்க, தாரிகா திரும்பி பார்த்தாள்.  எப்பொழுதும் நேர்த்தியாக அழகாக, ஆடைகள் அணிபவன் இரண்டு மூன்று நாட்களாக ஒரே சட்டையும், பேண்டுமாக போவதும் வருவதுமாக இருப்பதை கவனித்தாள். கலைந்த கேசமும், சோர்ந்து போன கண்களுமாக, மிகவும் களைத்து காணப்பட்டான். அவள் பார்த்தவாறே இருக்க கலைந்த கேசத்தை கோதியவனாக முன்னால் வந்து,

''இன்னியோடு இங்கு டைவோர்ஸ் மேட்டர் முடிஞ்சுது. இந்தாங்க பிளைட் டிக்கெட் நாளை மறு நாள் பிளைட். டிக்கெட் எக்ஸ்பிரஸ் ஸ்பீடில் எடுத்தாச்சு. பட் எக்கனாமிக் க்ளாஸ் தான். நம்ம டேட்டுக்கு பிசினஸ் கிளாஸ் இடம் இல்லை...கிருஸ்துமஸ் வர போகுது இல்லையா? சோ எல்லாம் புல் '' என நீட்ட தாரிகா மனது என்ன உணர்வு என விவரிக்க முடியாத உணர்வை பரவ விடத்தொடங்கியது. அவனே தொடர்ந்தான்.

''உங்க அப்பாவுக்கு போன் போட்டு சொல்லிட்டேன்'' என்றதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்தாள். அவளது விழி அதிர்வை கண்டவன்,

''நாங்க வரோம்ன்னு மட்டும் சொன்னேன். மத்ததை அங்கே போய் சொல்லிக்கலாம்'' என்றான்.

''அவருக்கு எதுக்கு இன்பார்ம் பண்ணீங்க?'' குரலில் சினம்  எட்டிப்பார்க்க கேட்டாள். அவன் புருவம் சுருங்கியவனாக,

''உங்களை அவங்க கையில் ஒப்படைக்கணும் இல்லையா? எப்படி என் கூட உங்களை அனுப்பி    வைத்தார்களோ? அப்படியே திருப்பி தந்திருக்கேன்னு சொல்லணும் இல்லையா ? அந்த பொறுப்பு எனக்கு இருக்கு இல்லையா?'' என பொறுமையாக அமைதியான குரலில் கேட்டான்.

அவள் எரிச்சல் மண்டியிட அவனை வெறித்தாள். அந்த வெறித்த பார்வையையே இவனும் வெறித்தவனாக,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ