நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 19

380 11 0
                                    

19
ஹலோ லண்டன் தாதாவா? வணக்கம் நான் தாரிகா பேசுறேன். எந்த தாரிகான்னு யோசிக்காதே ! நீ நாளைக்கு பொண்ணு பார்க்குறேன் பேர்வழின்னு உன் பணத்தால் என்னை வாங்க வர போறியே.. அந்த பொண்ணு நானே தான் ! நான் சொல்றதை கவனமா கேட்டுக்கோ.. ! இரு இரு...உனக்கு தமிழ் தெரியும்ல ? இல்லைன்னா இங்கிலீசுல சொல்லவா? ஆனா பாரு தமிழில் நச்சுன்னு மண்டையில ஏறுற மாதிரி என்கிட்டே வார்த்தைங்க கொட்டிக்கிடக்கு ! சோ...நான் தமிழில் பேசுறேன்.. நீ வேணா வாய்ஸ் ரெக்கார்டிங் பண்ணிட்டு ட்ரான்சிலேட் பண்ணிக்கோயேன்...'' என்றது தாரிகாவின் குரல் அமர்த்தலாக.

அபிநவ் திடீர் சரவெடியை எதிர் பாராதவன் சுய நினைவுக்கு வர கொஞ்சம் திணறித்தான் போனான்.

''ஹலோ நான்'' என அவன் தொடங்க,

''ஏய் ! க்ளோஸ் யுவர் லண்டன் மவுத்... ! நான்தான் போன் பண்ணேன்.. நான்தான் பேசுவேன்.. நீ கேட்கணும்.. கேளுடா..நான் நீட்டி முழக்கி பிரசிடெண்ட் மீட்டிங் போட கால் பண்ணலை ! உனக்கு அன்பா, நட்பா வார்னிங் பண்ணத்தான் போன் போட்டேன்''

''எ..ன்..னது அ..ன்பாவா ?'' அபிநவ் திணறலுடன் கேட்க,

''ஏய் இன்னொரு தடவை வாயை திறந்தே.. நீ இருக்குற லொக்கேஷனை வைச்சு உன் முன்னாடி வந்து நிற்பேன்..மூடிக்கிட்டு கேளுடா வெண்ணெ !'' அவள் குரல் அதட்டலில், அபிநவ் எச்சில் விழுங்க சிரமாக இருந்ததை உணர்ந்தான்.

''இத பாரு ! நீ எந்த கொம்பனாக இருந்தாலும் எனக்கு கவலையில்லை.. இந்திய சனத்தொகை தெரியலைன்னா.. கூகிள்கிட்டே கேளு சொல்லுவான்.. அதுல ஒன்னை புடிச்சுக்கோ..அதை விட்டுபுட்டு என்னை தேடி வந்தே பாரு.. அது முதல் தப்பு ! அப்புறம் உன்னோட பாரின் பவுண்ட்ஸை காட்டி மயக்கலாம்ன்னு நினைச்சே அது ரெண்டாவது தப்பு ! அப்புறம் இந்த தாரிகாவைத்தான் பிடிச்சு இருக்கு என்று தரகர் கிழடுகிட்டே சொன்னே பாரு அது பெரிய தப்பு ! ரொம்ப தப்பு பண்ணிட்டே''

''......''

''லுக் கியர் ! நீ நாளைக்கு பொண்ணு பார்க்க என் வீட்டு பக்கம் வர கூடாது ! வந்தா உனக்கு அங்கு வேற விதமான மியூசிக் கச்சேரி இருக்கும்'' அவள் சூடாக சொல்ல, அபிநவ்வுக்கு சூடு ஏறியது.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora