நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா -9

420 11 0
                                    

9
இந்தியா - சென்னையின் ஒரு பகுதியில், நெருக்கமான வீடுகள் கொண்ட காலனி. ஒரு இடமும் மீதம் வைக்காது அருகருகே கட்டி வாடகைக்கு விடப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு வீட்டில் இருந்து,  ஒரு குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்க, பாதி ஜீவன்கள் தூண்களுக்கு பின்னால்  கையை பிசைந்தவாறு நின்றிருந்தன. ஒரு ஜீவன் மட்டும் மிகவும் பதட்டமாக இருந்தது.

''இத பாருங்க..சும்மா சும்மா பெட்ரோல் செலவழிச்சுகிட்டு ஒவ்வொருவாட்டியும் என்னால வந்திட்டிருக்க முடியாது...இந்த தேதிக்கு தரணும்னு தெரியும். எடுத்துக்கிட்டு வந்து தரதுக்கு என்ன? ஒரு மனுஷன் வேலை எல்லாம் விட்டு வந்தா இப்படி ஆளாளுக்கு கைய சொறிஞ்சுகிட்டு இருப்பீங்களா? வட்டிக்கு  பணம் வேணும்ன்னு கேட்கும் போது எத்தனை குழைவு ? எத்தனை பணிவு? வாங்கின கடன் ஒரு பர்சன்டேஜ்ஜையாவது திருப்பி  தந்தீங்களா? அசலும் இல்லை வட்டியும் இழுபறி..'' குரல் உயர்த்தி சத்தம் போட்டார் வட்டிக்கு பேர் போன அந்த வட்டார வாசுதேவன்.

''வாசு சார் கொஞ்சம் மெதுவா பேசுங்க ப்ளீஸ்'' அதுவரை கைகளை பிசைந்தவாறு கேட்டுக் கொண்டிருந்த சண்முகவேல் குரல் கெஞ்சியது.

''இதபாருங்க சண்முகம், எனக்கு ஏற்கனவே ரத்தக்கொதிப்பு இருக்கு.... வாக்கு தவறமாட்டீங்கன்னு என் பிரண்டு சொன்னதாலதான் அவ்ளோ தொகையை தூக்கி தந்தேன். பையன் போய் சம்பாதிச்சு தரலன்னாலும் பொண்ணு சம்பாதிச்சு திருப்பிடுவான்னு சொன்னீங்க''

''ஆமாங்க '' மெதுவாக தலையசைத்தார் சண்முகவேல்.

''வட்டிக்கு விடுறது என் தொழிலாக இருக்கலாம் ஆனால் நேர்மை நாணயமானவன்..என்கிட்டே வாங்கறவங்களும் அதே போல தான்..எனக்கு பிபி ஏற வைச்சுக்கிட்டு இருக்குற ஒரே ஆளு நீங்க தான்... ''

''மன்னிச்சுக்கோங்க...நேத்தே சம்பளக் கவர்  வந்திருக்கணும்... ஆனா என் பொண்ணோட முதலாளி ஊருக்கு போயிருக்காரு..இன்னிக்கு வந்திடுவார் ..சாயங்காலம் என் பொண்ணு கவரோட வந்திடுவா. வந்ததும் மொத வேலையா கொண்டு வந்து தந்துடுறேன். நீங்க வேகாத வெயிலில் நின்னுகிட்டு கிளம்புங்க'' என கெஞ்சாத குறையாக சண்முகவேல் சொல்ல, கொஞ்சம் கோபம் தணிந்தவராக  வாசுதேவன்,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாحيث تعيش القصص. اكتشف الآن