நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 61

362 9 0
                                    

61

விமானம் சம நிலைக்கு வந்தும் தாரிகா கண் திறவாது முருகன் சரணம் சொல்லிக்கொண்டிருந்தாள்.

''அவள் அப்படியே சொல்லிக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?''  என எண்ணிக்கொண்டான்.

தாரிகாவின் உடலுக்குள் ஒரு மாற்றம் உருவாக கண்விழித்தாள். அவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பது தெரிந்தது. அவனது  கண்களில் ஒரு வித ஒளி தெரிவதை கவனித்தவள்,

''டைவோர்ஸ் ஆக போகிறது நினைவுக்கு வரலையா? இந்த லுக்கு விட்டுகிட்டு இருக்கான்'' முணுமுணுத்தவளுக்கு பின்புதான் உறைத்தது அவனது பார்வைக்கும்,  சிரிப்புக்கும் அர்த்தம் தனது கரம் அவனது கரத்தை கோர்த்தவாறுஇருந்ததை பார்த்து.

''நாசமா போச்சு! எப்போ இந்த கண்ராவி வேலை பார்த்தேன் ?'' என பதறியவாறு உதறினாள். அவனோ அதே சிரிப்புடன்,

''கண்ராவி வேலையா?  பட் கரண்ட் அடிச்ச வேலை ஒரு சைட்டுக்கு மட்டும் ஒயர் கனெக்ஷன் கொடுத்து நோ யூஸ்'' என ஒரு பெருமூச்சு விட்டான். பின் ஹெட்போனை மாட்ட போனவன் அவள் தனது கைகளை போட்டு பிசைந்து கொண்டிருந்தாள். அதை கவனித்தவன்,

''போதும் ரேகை அழிஞ்சிட போகுது! எவ்வளவு தான் தேய்ப்பீங்க?'' என கிண்டலடித்தான்.

''ஒரு மேனசு வேண்டாம் நான்தான் விவஸ்தை கெட்டுபோய் பயத்துல பிடிச்சா. இதுதான் சாட்டுன்னு இப்படியா? என சினத்துடன் கேட்டாள் அவனோ,

''என்னடா இது வம்பா போச்சு? நாம விவாகரத்து பெற காத்திருக்கும் விவகாரமான தம்பதிகள் என்று நான் நன்றாக எனது மூளையில் பதிவு செய்துள்ளேன் மேடம்'' என்றான் அச்சு பிசகாத தமிழில். அவனது வார்த்தை உபயோகத்தை பார்த்து கோபம் போய் வியப்போடு பார்த்தாள்.

''என்ன பார்க்குறீங்க? உங்க சினிமா பார்த்தாலே தமிழ் நல்லா வரும் போல இருக்கு'' என்றவாறு அவன் விட்ட இடத்தில் இருந்து மூவியை பார்க்க பார்வையை திரை மீது திருப்பிக்கொண்டான்.

''கடவுளே இன்னும் எத்தனை மணி நேரம் இப்படியே உட்கார்ந்து இருப்பது? சீக்கிரம் இந்தியா வந்துவிடாதா'' என முணுமுணுத்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora