நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 65

383 9 0
                                    

65

வீடு வந்தடைந்தது மகளை கண்ட சந்தோஷத்தில் சாவித்திரி ஓடி வந்தாள்.

தனது வீட்டுக்கு போகாமல் மாளிகை போன்ற வீட்டுக்கு வந்ததை கண்டு கொண்டவள் ''இது யார் வீடு?'' என கேட்க வாயெடுத்தவளுக்கு சட்டென்று ''இது தான் அவன் வாங்கி தந்த வீடா?'' மனது தனக்குள் கேட்டுக்கொள்ள அருணின் குரலால் திரும்பினாள்.

''உன் வீடு தான் போ'' என்றான்.

''தாரு மாசமாயிட்டியா?'' என அந்த தாய் சந்தோஷ பூரிப்போடு அவளது வயிற்றை தொட்டு பார்த்து கேட்டவாறே விழிகளால் பின்னால் மாப்பிளை வந்து இருக்காரா?'' என தேடியது. தாரிகா மனசு குற்ற உணர்வில் தாக்க உதட்டை கடித்தவளாக,

''இல்லைம்மா! எனக்கு கிளைமேட் ஒத்துக்கலை! அவர் வரலை'' என முணுமுணுத்துவிட்டு காலடி எடுத்து வைத்தவளுக்கு கால்கள் கூசியது.

'கரம் பிடித்தவனை உதறிவிட்டு அவன் வாங்கி கொடுத்த வீட்டுக்குள் என்ன உரிமையில் காலடி எடுத்து வைப்பது?' என தயங்கி அவள் வாசலில் நிற்க, சாவித்திரி,

''உன் வீடு தான் வா!'' என இழுத்துக் கொண்டு போனாள்.

சண்முகவேல் மகளை கண்டு முகத்தை திருப்பிக்கொண்டார். மாப்பிளை பார்த்ததில் இருந்து அவள் தன் கூட ஒரு வார்த்தை பேசாமல் இருப்பதை கணக்கில் வைத்து இருந்தார்.

தாரிகாவும் தந்தையை கண்டும் காணாதது போல இருந்தாள்.

மனமோ ''எல்லாம் இவரால் தானே? இப்படி வந்து நிற்கிறேன். ஒரு சொல்லு கேட்டாரா? வேணாம் வேணாம்ன்னு கதறினேனே விட்டாரா? பிளாக் மெயில் செய்தா கட்டி வைச்சே? பாவி தகப்பா! பாழா போனது என்னோட வாழ்க்கை மட்டுமல்ல, அப்பாவி ஒருவனது வாழ்க்கையும் தான்...அவன் உன் குணத்தில் ஒரு சதவீதமாவது இருந்து தொலைச்சானா? அநியாயத்துக்கு நல்லவனா இருந்து என்னை சாகடிச்சுக்கிட்டு இருக்கான்...'
அவள் வெறித்தவாறு நின்ற இடத்தில் நின்றவாறே மனக்குமுறல்களுக்கு முக பாவனைகள் மாற்றி கொண்டிருந்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora