58
அவளின் எல்லா சந்தேக கேள்விகளுக்கும் விடை அளித்து தீர்க்கும் விதமாக பேசிய திருப்தி அவனது முகத்தில் வந்து அமர்ந்தது. ஆனால் தாரிகா இடிந்து போனாள். தலையை இரு கைகளாலும் தாங்கி பிடித்தவாறு சோபாவில் தொப்பென்று அமர்ந்தாள்.
''சந்தேகம் வரலாம். அதை மனதுக்குள் போட்டு குமைந்து கொண்டு இருக்க கூடாது. மனநோயாளி ஆக்கிவிடும். இல்லைன்னா எதிராளியை வீழ்த்தி விடும். நீங்க மனம் விட்டு பேசமாட்டீங்களா? என்று நான் தவம் இருந்தேன். ஆனா நீங்க கொட்டியது எல்லாமே உங்க பிரண்ட்ஸுக்குகிட்டே.''
''.....''
''அதை நான் படித்ததால் தான் எனக்கு தெளிவு கிடைத்தது. அதனால் அந்த செயல் கூட இப்போ பார்க்க போனா தப்பாக தோணலை. எந்த பிரச்சனை என்றாலும் சம்பந்தப்பட்டவங்ககிட்டே பேசிடனும். அதை விட்டு மூன்றாவது நபரிடம் எதுக்குங்க நம்ம குடும்ப விஷயம் எல்லாமே சொல்லிக்கிட்டு...? அது உயிர்தோழியே ஆனாலும்? முதல் ஹஸ்பண்டுக்கு உயிர் தோழி அவன் மனைவி. அதே போல அவளுக்கு அவன் தான் உயிர் தோழன். இப்படி இருக்கும் தம்பதிகள் மத்தியில் என்னிக்கும் பிராப்ளம் வந்தது இல்லை. வந்தாலும் இருவரும் பேசியே தீர்த்துவிடுவார்கள். மூன்றாவது மனிதர்களின் தலையீட்டினால் தான் பல குடும்பங்கள் கோர்ட், கேஸ் என்று போகுது. எனிவே நான் பேசிய கொடுமையான தமிழ் உச்சரிப்பை சகித்தது, இவ்வளவும் பொறுமையாக கேட்டுக்கொண்டு இருந்ததுக்கும் நன்றிகள். ''
''....''
''நீங்க எடுத்த முடிவு கரெக்ட்டுதான். உங்க லைஃப்ப டிசைட் பண்றதுல ஸ்டெடியாக இருங்க. உங்க லைஃப் உங்க பொறுப்புங்க. அதை நீங்க தான் வாழணும். யாருக்காகவும், எதுக்காகவும் வாழு என கட்டாயப்படுத்துற நிலை வரக்கூடாது. இனியும் அப்படி ஒரு தப்பை செய்யாதீங்க.''
''.....''
''இந்தியா போனதும் அடுத்து என்ன செய்ய போறீங்கன்னு யோசிங்க. எதுவா இருந்தாலும் நான் ஒரு நல்ல பிரண்டா சாரி என்னை நீங்க மனுஷனாக கூட மதிக்கவில்லை. எப்படி பிரண்டா?'' என அவன் இடை நிறுத்த, தாரிகா முகத்தை மூடிக்கொண்டு அழுதாள்.
YOU ARE READING
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...