நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 35

316 11 0
                                    

35

மேலும் ஒரு நாள் தங்கிய ஆர்ஷன் மனைவியின் குடும்பத்துக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என பட்டியலிட்டான். அதன் பின் ஹனிமூனில் இருந்த அபிநவ்வை தொடர்பு கொண்டு ஒவ்வொன்றையும் சொல்லி செய்து கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். அவன் நண்பனை பெருமை பாதியாக ஆச்சர்யம்  பாதியாக பார்த்தான்.

''டேய் பொண்டாட்டின்னு ஒருத்தி வந்ததும் எப்படிடா அவ குடும்பத்து மேல இப்படி ஒரு அக்கறையும் வருது ? நீ ''கிரேட் டுடா ''என்றான்.

''ரிகா என் கூட ஹாப்பியா லைஃப் வாழணும் என்றால் அவ பேமிலி மெம்பர்ஸ் நல்லா இருக்கனும்டா ! சோ எல்லாம் ரிகாவுக்காக செய்யுறேன். இது நமக்குள்ளே இருக்கட்டும் ரிகாவுக்கு தெரிய வேண்டாம்''

''ஏன்டா அவளும் தெரிஞ்சு கொள்ளட்டுமே ! எனக்கு வாய்த்த புருஷன் எம்புட்டு கோல்டு கேரட்'' அபிநவ் சொல்ல,

''நோ டா ! நான் என்னமோ அவ லவ்வை பெற, அவளை இம்ப்ரஸ் பண்றதுக்காகத்தான் இது எல்லாம் பண்றேன்னு நினைச்சுடுவா'' ரொம்ப டிஸார்டர் ஆனது போல இருக்கா. மவுத் ஓபன் பண்ணி பிரீயா பேச ஸ்டார்ட் பண்ணல. டைம் வேணும்ன்னு சொல்றா. இந்த கண்டிஷனிலே என்  லவ்வ இப்படியா பணத்தை காட்டி பெறுவேன்னு என்னை தப்பா நினைச்சுட்டா?'' அவன் மறுப்பாக தலையசைத்தவாறு சொன்னான்.

''க்கும் அவ குடும்பம் சொல்லாதாக்கும்''

''அவங்க சொல்லி அவ தெரிஞ்சு கொள்ளட்டும் பட் நானாக என் வாயால் சொன்னா அது  Self-conceit ஆயிடும் என்னமோ மை ஸ்டேட்டட்  காட்டி ரிகாவை Slave ஆக்குறது போல பீலிங்ஸ்''

''அட எல்லா சைடிலும் திங்க் பண்றியேடா நல்ல புருஷன்டா'' அபிநவ் பாராட்ட மற்றவன் புன்னகைத்தான்.

ஆர்ஷன் குடும்பம் லண்டன் பயணமானது. சண்முகவேல் குடும்பம் தாரிகாவை பிரிய மனது இல்லாது அழுதது. குறிப்பாக பெண்கள் தான் அழுதவாறு இருந்தார்கள். தாரிகாவுக்கு நெஞ்சு விம்மியது.

'எதுக்கு இந்த தூரதேச வாழ்க்கை? என்ன பாவம் செய்தேன்?. பிறந்த மண்ணை விட்டு, உறவுகளை விட்டு எதுக்கு அனாதையாக போகணும்? கஞ்சியோ கூழோ குடிச்சாலும் சுற்றம் சூழ சொந்த நாட்டில் தாயின் அருகே இருந்துவிடலாம். கூலிக்கு வேலை செய்பவனை கட்டிக்கிட்டாலும்  அந்த சுகம் போதுமே ! வேண்டாத ஒவ்வாத வாழ்க்கைக்கு பலியாடு ஆக்கிவிட்டு நரகத்தில் உழன்று கொண்டு இரு என எனக்கு  சாபம் போட்டது யார்?'மனது குமுறலாக கேட்க தாலியை அறுத்து எறிந்துவிட்டு தாயை கட்டிக்கொண்டு கதறவேண்டும் போல் ஒரு வேகம் எழுந்தது.

அவளது முகத்தில் பலவித உணர்ச்சிகளின் ரேகைகளை படித்த ஆர்ஷன் அவள் உதட்டை கடித்து துயரத்தை அடக்குவதையும் கண்டான்.

''மாமா ! டெயிலி ரிகா கூட வீடியோ கால் பேசுங்க ! அப்புறம் அவங்க கொஞ்சம் செட்டிலானதும் அடிக்கடி வந்து போவது போல அரேஞ் பண்ணிடுறேன். இல்லைன்னா நீங்க வந்து போகலாம். டோன்ட் பீல்.'' என்றான் பயணம் ஏறும் தறுவாயில் . மாமனாரும் அவனது கைகளை பிடித்து நன்றி கூறினார். பின் அருண், தருண், மாறன் பக்கம் திரும்பி,

''மை டியர் சக்லைஸ் !  உங்களை என் கசின் அபிநவ் காண்டாக்ட் பண்ணுவான் அவன்கிட்டே எல்லாம் சொல்லி இருக்கேன் அவன் பார்த்துக்கொள்வான்'' என்றான். புன்சிரிப்புடன். அவர்கள் புரியாது ஒருவரை ஒருவர்  பார்க்க,

''டோன்ட் வெரி !'' என்றவாறு அவர்களது கைகளை குலுக்கி விட்டு, சாவித்திரி பக்கம் வந்து,

''அம்மா உங்க சாப்பாடு சாப்பிட தனியாக பிளைட் புடிச்சு வரணும் ! வருவேன் ரிகா செட்டிலாகட்டும்'' என்றான்.

பெண்கள் அழுது கொண்டே இருந்தார்கள். தாரிகா எல்லாம் கேட்டுக்கொண்டு இருந்தாலும் மனது பாரத்துடன் விமானம் ஏறினாள்.

விமானத்தில் கூட ஆர்ஷன் தாரிகா அருகே அமர்ந்தான் இல்லை. அவளது முதல் விமான பயணத்தை தத்தளிக்கும் பயணமாக்க அவன் விரும்பினான் இல்லை. பெண்களை இருவரையும் அருகருகே அமரவிட்டு தந்தையுடன் அவன் அமர்ந்து பயணம் செய்தான்.

தாரிகாவுக்கு பல ராட்சத பேய்கள் இழுத்துக்கொண்டு போய் பாதாளத்தில் மூச்சு முட்ட அடைக்க போவது போல ஒரு உணர்வு வருவதையும்  மனதும் நினைவுகளும் உறவுகளிடம் பின் தங்கிட உடல் மட்டும் தண்டமாக பயணம் செய்வதையும் உணர்ந்தாள்.

ஆசையாக  ஒருவனை காதலித்து, அணு அணுவாக அந்த சுகத்தை அனுபவித்து , அவளாகவே விருப்பப்பட்டு அவன் கரம் பற்றி குதூகலத்துடன் பயணம் ஆகும் வரம் வாய்க்காத  தனது நிலையை வெறுத்தாள்.

மருமகளை பார்த்து பார்த்து கவனித்தபடி வந்தாள் சுபத்திரா.
(...)

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDove le storie prendono vita. Scoprilo ora