நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 29

326 11 0
                                    

29

இதர வேலைகளை முடித்துவிட்டு வந்த வத்ஸலா  கண்களில் தாரிகா தனியாக ஒதுங்கி இருப்பது தெரிந்தது.

''என்ன இந்த பெண் இன்னுமா இறுகி போய் இருக்கிறாள் ? நல்ல வாழ்க்கை, நல்ல மனிதர்கள் புரிந்து கொள்ளாமல் அழித்து விடுவாள் போலிருக்கே'' கவலையுடன் யோசித்தவளாக  நாத்தனாரின் இடத்துக்கு விரைந்தாள்.  மற்றவர்கள்  கிளம்ப ஆயத்தமானார்கள்.

சாவித்திரியும் மகளிடம் ''பார்த்து பக்குவமாக நடந்து கொள்'' என சொல்ல வேண்டும் போல் இருக்க அவளைத்தேடி வந்தாள். எல்லோரும் தன்னை தேடி வருவதை பார்த்தவளுக்கு மேலும் எரிச்சல் மூண்டது.

''நாப்பது இலவச அட்வைஸ் அள்ளி தெளித்துவிட்டு போக வருகிறார்களாக்கும்'' முணுமுணுத்தவள் அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டாள். வத்ஸலா  நடையின் வேகத்தை கூட்டி அவளருகே வந்து,

''தாரு இந்த பட்டுப்புடவை, தாலி, குங்குமம்ன்னு, உன்னை பார்க்க எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா ?  கல்யாணம் நல்லபடியாக முடிஞ்சுது.  நான் பார்த்த வரைக்கும் மாப்பிளை வீட்டுக்காரங்களை குறை சொல்ல முடியாது. அவர் கூட சேர்ந்து வாழ்ந்துக்கோ... தாரு  வாழும் காலத்திலே இளமையிலேயே வாழ்ந்துக்கோ ! அநியாயமாக அழிச்சுடாதே''

''அண்ணி? நீங்களா முன்னுக்கு பின் முரணா பேசுறீங்க?'' சிறு கோபத்துடன் கேட்டாள்  தாரிகா.
அண்ணிக்காரி  வத்ஸலா  தான்  தன்னை மிகவும் புரிந்து கொண்ட ஜீவன். அவளின்  சப்போர்ட்டில் ஆறுதலாக இருந்தவளுக்கு அதுக்கு சந்தேகம் வருவது போல தற்பொழுது அவள் பேசியதும் சிறியவளுக்கு கொஞ்சம் அல்ல நிறையவே அதிர்ச்சியாக இருந்தது.

''இல்லைம்மா முரணா பேசல..நல்லா ஆராய்ந்து பிராட்டிக்கலா பேசுறேன்'' என்றாள் அவளது தலையில் இருந்த மல்லிகை சரத்தை  சரி செய்தவாறு. அப்பொழுதும் தாரிகா முகத்தில் சினம் குறையாது இறுகி போய் இருப்பதை பார்த்த சாவித்திரி,

''இதபாருமா எனக்கு கூட பட படப்பாக இருந்திச்சு... ஆனா இப்போ இல்லை. கண் காணாத இடம் என்று கலங்கிட்டு இருந்தேன்.. ஆனா உன் மாமியாரை பார்த்ததுக்கு அப்புறம்.. அது எல்லாம் போச்சு.. மனச மாத்திக்க ! மனப்பூர்வமாக நீ மாப்பிளை கூட சேர்ந்து வாழுறதுக்கு தயாராகி கொள் ! ''

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ