நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 59

390 11 0
                                    

59

ஆர்ஷன் இந்தியா கிளம்ப முதல் கம்பெனி ஒழுங்குகளை சரி செய்து கொண்டிருந்தான்.
அதே நேரம் தாரிகாவின் லண்டன் வதிவிட விசா (residence visa id card) ஆவணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தான். மனைவிக்கு உடல் நல கோளாறு காரணமாக இந்தியா திரும்பிட வேண்டும் எனவும் , உடல் நிலை சீரானதும் மேற்க்கொண்டு தொடர்பு கொள்கிறேன் என்று சொல்லிவிட்டான்.

தாரிகாவுடன் சென்று அவளை ஒப்படைத்து விட்டு அடுத்த பிளைட்டில் திரும்புவது என எல்லாம் சரியா செய்து இருக்கிறோமா ? என சரி பார்த்துக்கொண்டான். 

தாரிகாவின் முகத்தில் ஒரு வித அமைதி குடி கொண்டிருப்பதையும், அது தெளிவுக்கு  வந்திருப்பதையும் அவன் கண்கள் கவனிக்க தவறவில்லை.

''எல்லாம் ஜெட் ஸ்பீடுல ரெடி பண்ணியாச்சுங்க...நாளைக்கு இதே நேரம் நீங்க இந்தியாவில இருப்பீங்க. பட்  டைவோர்ஸ் வெயிட் பண்ணித்தான் எடுக்கணும். பொறுமை ..பொறுமையாக காத்திருந்து'' என்றான் அவளை பார்த்தவாறே. அவள் பதில் பேசாது அவனையே பார்த்தாள்.

அவனோ ''இப்போ உங்க மன நிம்மதிக்கு நீங்க கேட்டு என்னால் கொடுக்க முடிஞ்ச ஒண்ணு அதுவே! உங்க முக மாற்றத்தையும் ,  சந்தோஷத்தையும்  பார்க்கும் போது நாலைஞ்சு தடவை டைவோர்ஸ் பண்ணிடலாம் போல இருக்கு'' என சொல்லி சிரித்தான். அப்பொழுதும் அவள் எதுவும் பேசாது இருந்தாள்.

''எனக்கு ஒரு கோபமோ உங்க மேல இல்லைங்க. ஏன் வரவில்லைன்னும் புரியல! ஆனா ஒரு சின்ன வருத்தம் தான்'' அவன் சொல்லிவிட்டு அவளை பார்த்தான். அவள் என்ன என்பது போல பார்த்தாள்.

''நான் வேணா இந்த மூஞ்சி முழுக்க தாடி, வாய் முழுக்க மீசை வைச்சு டெரர்ரா ஒரு  லூக்கோடு   இருந்திருந்தா உங்களுக்கு புடிச்சு இருக்குமான்னு தெரிஞ்சு கொள்ள சான்ஸே தாராமலேயே விட்டுடீங்க'' என்றான் தாடையை சோகமாக தடவியவாறு யோசிப்பது போல.
அவளுக்கு ஏனோ சிரிப்பு வர சிரித்தாள்.

ஆர்ஷன் விழிகள் ஆச்சர்யமாக பார்த்தது. அவன் கூட அறிமுகமான நாள் தொட்டு  இவ்வளவு நாட்களில் அவள் சிரித்து அவன் பார்த்தது இல்லை.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now