நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 36

327 10 0
                                    

36
தாரிகாவுக்கு லேசாக விழிப்பு வர மிகவும் கஷ்டப்பட்டு கண்களை திறந்தாள். காகங்களின் கூச்சல் இல்லை. காரன் ஒலிகள் இல்லை. அப்படி, இப்படி என்று கூச்சல் போட்டு காய்கறி விற்பவரின் குரல் இல்லை. மயான அமைதியை தூக்கி சாப்பிடும் அமைதி. பட்டென்று எழுந்து உட்கார்ந்தாள்.
வெல்வெட் மெத்தையில் இருந்தாள்.

''நான்... நான்.. எங்கே இருக்கேன் ?'' மிரண்டவாறு சுற்றும் முற்றும் பார்த்தாள். அந்த விசாலமான அறை அதன் அமைப்புகள், மாட்டி இருக்கும் ஓவியங்கள் ''நீ லண்டனில் இருக்கிறாய்'' என பறை சாற்றியது.

போர்வையை விலத்தி விட்டு விருட்டென்று எழுந்து கொண்டவளாக ஓடி போய் ஜன்னலை திறந்தாள். திறந்த வேகத்திலே மூடிக்கொண்டாள். ஐப்பசி மாத குளிர் சில்லென்று காற்றுடன் இவளது முகத்தில் முத்தமிட்டு ஓடியது. மனது பதைபதைக்க மெல்ல ஜன்னலில் சாய்ந்து கொண்டாள். நெஞ்சில் கை வைத்தவள் விரல்களில் தட்டுப்பட்டது தாலிச்சரடு. குழப்பத்துடன் எடுத்து பார்த்தவள், தலையில் அடித்துக்கொண்டாள்.

''கடவுளே நான்... நான் என.. எனக்கு கல்யாணம் ஆகிடுத்து ... நான் லண்டன் வந்து இருக்கேன்... பிளைட் ஏறியது தான் நினைவு.. அப்புறம் வாந்தி.. மயக்கம் இப்போ இங்கு இரவா ? பகலா ? நேரம் என்ன ? யப்பா அடிச்சு போட்டது போல தூக்கம். அப்படீன்னா அவன்... அவன் என்னை மயக்கமாக்கி அனுபவிச்சுட்டானா?'' சட்டென்று அவளது சந்தேக சாத்தான் அந்த நேரத்தில் கேட்டது.

ஓடி சென்று அந்த அறையில் இருந்த ஆளுயர கண்ணாடியில் தனது உடலை பார்த்தாள். முகத்தை அப்படியும், இப்படியும் திருப்பினாள். அடி வயிற்றில் கை வைத்து பார்த்தாள்.

''அய்யோ ! என்ன நடந்திச்சு எனக்கு ? ஒரு விமான பயணத்தில் இப்படி நினைவு இல்லாம போவியாடி ? இவ்வளவு தானா? உன் வாய்ச்சாடல், வீரம் எல்லாம்'' அவள் பேசியவாறு இருக்க கதவை தட்டிவிட்டு நுழைந்தான் ஆர்ஷன்.

''குட் மார்னிங் பேபி ! you feel good ?'' என கேட்டான் . அவளை புன்னகையுடன் பார்த்து,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOù les histoires vivent. Découvrez maintenant