நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 51

376 11 0
                                    

51

அடுத்த நாள் ஆர்ஷன் எதுவும் நடவாதது போல நடந்து கொண்டான். தாரிகா எழுந்திருக்கவில்லை. அவளாகவே எழுந்து கொள்ளட்டும் இனி தனக்கு எந்த உரிமையும் இல்லை. அவள் யாரோ, தான் யாரோ என்ற மனநிலைக்கு வந்து இருந்தான்.

தனது ஆபீசு அறையில் வக்கீலை தொடர்பு கொண்டு அவர் அனுப்பி வைத்த விவாகரத்து பத்திரங்களை பூர்த்தி செய்தவாறு இருந்தான். வழக்கம் போல ஒரு வருட கால அவகாசம் மனம் மாறுவதற்கு என்று அதில் போட்டிருக்க, அதை படித்தவன்,

''சட்டத்தை மாத்துங்கடா! ஒரு நாளிலேயும்  டைவோர்ஸ் ஆகுற நிலைக்கு வந்துட்டாங்க! எந்த ஜென்மத்துக்கும் உங்களை புருஷனாக ஏற்றுக்கொள்ள போவது இல்லைன்னு சொல்ற பெண்களை நினைச்சு பாருங்க! அவங்களுக்கு இந்த ஒரு வருட காலம் ஓவர்டா '' என சொல்லிக்கொண்டவன், தனது பகுதியில் கையொப்பம் இட்டு விட்டு பேனாவை வைத்தவன் மனதோ,

''chapter  overடா  அபி...! இவ்ளோ சீக்கிரத்தில் ஒரு காண்ட்ராக்டில் சைன் வைப்பேன்னு நினைச்சு பார்க்கலை. பர்ஸ்ட் லவ்வு, பர்ஸ்ட் மேரேஜ், பர்ஸ்ட் தோல்வி...பச்...எல்லாம் சுத்த வேஸ்ட்டுன்னு ஆரன் அண்ணா சொன்ன போதே கேட்டு இருக்கணும்'' சொல்லியவாறு எழுந்து கொண்டவன், தாரிகா நேரம் பகல் பதினொன்று ஆகியும் எழவில்லை என உறைக்க விரைந்து வந்து பார்த்தான்.

விழி திறவாது கட்டிலில் படுத்தவாறே நடுங்கிக்கொண்டிருந்தாள். சட்டென்று எட்டு வைத்து வந்தவன், அவளது கட்டிலில் ஓரம் அமர்ந்து போர்வையை விலக்கினான், அவளது ஜுரத்தின் அனல் முகத்தில் தாக்கியது . தாரிகா உதடு வெட வெடுத்துக்கொண்டிருந்தது.

''ஓ மை காட்!'' என்றவன்,  தாய்க்கு அழைப்பு விடுத்து வர சொல்லிவிட்டு டெம்ப்ரேச்சர்ர் பார்க்கும் தர்மாமீட்டரை எடுத்து அவளது அக்குளுக்குள் வைத்தான். அவள் கண்களை திறக்க முடியாது முனகினாள்.  தனது தொடுகையை அவள் விரும்பவில்லை என்று அவனுக்கு புரிந்தது. எழுந்து கொண்டவன்.

''ஹாஸ்பிடலில் இருக்கீங்க. நான் ஆம்பிளை நர்ஸுன்னு நினைச்சுக்கோங்க'' என்றான் சிறு கிண்டல் தொனியில்.  அவள் தர்மாமீட்டரை எடுத்து எறிந்தாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாDonde viven las historias. Descúbrelo ahora