நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 68

422 11 0
                                    

68

தாரிகா வைக்கப்பட்ட மொபைலை வெறித்து பார்த்தவாறு,

''யாராச்சும் கோடி ரூபாய் பெறுமானம் உள்ள ஒன்றை பாரிசாக தருவாங்களா ? என் மேல உனக்கு அம்புட்டு லவ்வா ? என் குடும்பத்துக்கு செய்தது எல்லாம் என் காதலை பெறத்தான் ! அதுவே இல்லை என்றாகிவிட்டது ! அப்புறம் இது எல்லாமே எதுக்கு ?'' கேட்டவள் மறுபடியும் அவனுக்கு அழைப்பை விடுத்தாள்.

வண்டியில் போய் கொண்டிருந்தவன் கார் செட்டில் உள்ள ப்ளூடூத்தை அழுத்தினான்.

''என்ன மேடம் இப்போ எதை பேச போறீங்க ?'' என்றான் மெல்லிய சிரிப்பொலியுடன்.

''ஈஸ்வரா இவனுக்கு இந்த நிலையிலும் எப்படிடா சிரிப்பு வருது ?'' எண்ணியவாறு பெருமூச்சு விட்டவள்.

''என் குடும்பத்துக்கு உதவி செய்த உங்களுக்கு நன்றி சொல்வதா ? இல்லை திட்டுவதா ? ன்னு தெரியல. ஆனா என்கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்ய தோணலியா ?'' என குறைப்பட்டாள். அவள் அப்படி கேட்டதும்,

''உங்க வீட்டில் நான் தங்கிய முதல் நாளே உங்ககிட்டே சொல்லிட்டு செய்யலாம்ன்னு தோணிச்சு. பட் நீங்க மறுப்பீங்கன்னு தெரியும். எனக்கு உங்க குடும்பம் வேறு, நீங்க வேறு, என் குடும்பம் வேறு இல்லைன்னு தோணிச்சு ! தட்ஸ் ஆல்'' என்றான் அவன் பாதையில் கண் வைத்தவாறு அவள் மவுனமாக இருக்க,

''மேடம் இந்த வீடு மட்டும் தான் உங்களுக்கு . மத்த எல்லாம் ஒரு உதவி கடனாகத்தான், திருப்பி தரணும்ன்னு ஒப்பந்தம் போட்டு இருக்கு. சோ நீங்க பீல் பண்ணாதீங்க ! நீங்க தான் என்னமோ சிங்கம்ன்னு சொல்வீங்கல்லே.. என்னது ?'' என கேட்டவன் , யோசித்து பின்,

''எஸ்'' தன்மான சிங்கம் என்று தெரியும் ! ரோஷம், சூடு, சுரணை, எல்லாம் நிறைய சண்டை போட்டு டான்ஸ் ஆடுற அளவுக்கு திணறுற ஆளுன்னு தெரியும்'' என்றான்.

''யோவ்'' என அவள் அதட்ட இவன் சிரித்தவன் எதிரே கொட்டும் பனியால் பாதை தெளிவாக இல்லாது வாகனங்கள் சறுக்கியவாறு க்ரீச்ச் க்ரீச் என்று சறுக்கி சாய பார்க்க, எதிர் வரும் வண்டிகள் எல்லாம் நிலை இல்லாது சறுக்கி கொண்டே போனது. பனிக்கலாம் வந்தாலே வழக்கமாக நடக்கும் விபத்துகள் தான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ