83
''இவன் மனித ஜென்மம் இல்லையா ? என்ன ஜாதி இவன் ? என கேள்வி கேட்டு களைத்து போனேன். நீங்க சொன்னீங்க விலகி இருக்கலாம். புரிஞ்சு கொள்ளலாம். பிரண்டாக இருக்கலாம். என்று நானோ டைவோர்ஸ் தான் வேணும்ன்னு துள்ளினேன். இந்த முகத்தை பார்த்துக்கொண்டிருக்க முடியாது ஆம்பிளையா ன்னு ? கேட்டேன் பாருங்க ஒரு கேள்வி! பாவி! என்நாக்கில் என்ன வந்து இருந்திச்சோ? அப்ப கூட ரோஷம் சூடு சுரணை வரலையாடா உனக்கு ?''
''வந்து மனைவியை ரேப் பண்ணுவதா ஆம்பிளைத்தனம்? அவளை துன்புறுத்துவதன் மூலம் புருவ் பண்ணறதா? அதுவும் செக்ஸில் மட்டும் ஆம்பிளைன்னு காட்டுறதா அழகு!?'' அவன் கேட்க அவனை காதலுடன் பெருமை பொங்க பார்த்தவள்,
''அதே தான் அந்த பலாத்காரம், 'நீ என்னடி கேட்குறது ஆம்பிளை தான்னு? காட்டுறேன் பாருன்னு மத்தவங்க போல பலத்காரத்தில் இறங்கி இருப்பாங்க. ஆனா நீங்க?''
''ரிகா என்ன மிருகத்தனம் அது? நினைக்கவே பாடியில் இருக்குற பார்ட்ஸ் எல்லாம் இறுகுது..சே எப்படி முடியும்?'' அவன் முக சுளிப்புடன் கேட்டான்.
''இருக்காங்கப்பா மிருகத்தனத்தையும் வெல்லும் மிருகங்கள்.. எத்தனை பெண்கள் கட்டில் உறவை நினைத்தே நடுங்குவார்கள் என்று தெரியுமா? நானும் அடக்கம்! பெண்ணின் விருப்பம் இன்றியே எல்லாம் நடந்தேறும். அவள் குழந்தை பெறுவது கூட அவளின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது''
''பேசிக்கலி எல்லாம் தப்பாக இருக்கு எனக்குன்னா என்ன பண்பாடு? கல்ச்சர் ன்னு தோணுது'' அவன் யோசனையாக சொல்ல,
''அது எல்லாம் இப்படித்தாம்பா '' என்றவாறு தொடர்ந்தாள்.
''ஆரம்பத்தில் நான் நீங்க அம்மா கோண்டோ ன்னு நினைச்சேன்''
''வாட் போண்டாவா ? கோண்டாவா?'' அவன் புரியாது விழிக்க,
''யோவ் இப்படி முழிக்காதேய்யா எனக்கு லவ்வு பொங்குது'' என்றவளை பார்த்து சிரித்தவன்,
''பொங்குறது நல்லது பேபி மீனிங் என்ன?''
''அதுவா அம்மா சொல் கேட்டுகிட்டு அம்மா புள்ளையாகவே இருக்குறது''
BẠN ĐANG ĐỌC
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Lãng mạnஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...