63
சொந்த நாட்டின் வெப்பம் தாரிகா முகத்தில் பட கொஞ்சம் மூச்சு விட்டாள். எல்லாம் முடிந்து பயண பொதிகளை எடுக்கும் இடத்தை நோக்கி நடந்தார்கள்.
தாரிகா மௌனமாகவே வந்தாள். ஆர்ஷன் மொபைலை உயிர்ப்பித்து பெற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு அவள் பக்கம் திரும்பி,
''உங்களை அழைச்சு போக அண்ணாவும் அண்ணியும் வந்து இருக்காங்க. என் பிரண்டு போட்டு இருக்கான்.'' என்றான். தாரிகா நடையின் வேகத்தை குறைத்தவள் அவனிடம்,
''உங்ககிட்டே கொஞ்சம் பேசணும்'' என்றாள் தயக்கமான குரலில்,
''கொஞ்சமா? நிறையவே பேசுங்க கேட்க காத்திருக்கேன்''. என்றவன் லக்கேஜ் எடுத்துக்கொண்டு எதிரே காபி ஷாப் தென்பட அதில் அவளை உட்கார சொல்லி தானும் அமர்ந்தான்.
'லாஸ்ட் மினிட்ஸில் லவ்வு வந்துடும் போல இருக்கேடா. இப்படியே வந்த பிளைட்டில் பாய்ஞ்சு ஏறிடலாம்' மனசுக்குள் சொல்லியவன் அவளை பார்த்து,
''என்னாச்சுங்க? இதோ ஒரு டூ மினிட்ஸில் உங்க குடும்பம் உங்களுக்காக காத்திட்டு இருக்கு. நான் சொன்னது போல டைவோர்ஸ் ஆனதும் முத வேலையாக அந்த பேப்பரை உங்ககிட்டே ஒப்படைக்குறேன். டோன்ட் பீல்! இங்கே நான்வந்துட்டேனே அங்கே எப்படி மூவ் ஆகுமோ? இவன் ஏமாத்திட போறானோ? என கவலைவேணாம். இதை பத்தி பேசவோ ஏன் நினைப்பே இல்லாம நிம்மதியா இருங்க'' என்றான். அவள் எரிச்சல் மண்டியிட,
''ரொம்ப நல்லவர்னு நினைப்போ? யோவ்! இப்படி இருந்தே நான் மட்டுமில்ல எந்த பெண்ணுன்னாலும் நல்லா உன் தலையில் மிளகா அரைச்சுடுவா'' அவள் பேசிய விதம் பார்த்து புருவம் உயர்த்தினான். அவள் அந்த புருவ உயர்வை பார்த்துநெற்றியை தடவியவளாக,
''இத பாருங்க! எல்லாத்துக்கும் சாரி.. சாரி.. எல்லாத்துக்கும் தாங்க்ஸ்! இதை சொல்லத்தான் கூப்பிட்டேன்'' என்றாள் எங்கோ பார்த்துக்கொண்டு அவனோ,
'எமகாதகி! இதயத்துக்கு பதிலா பாறாங்கல்லா வைச்சு இருக்கே? நானும் பனித்தூவல் மென்மைக்கு கம்பேர் பண்ணி வைச்சேன். பனித்தூவல் கேட்டிச்சுன்னா காறி துப்பும்' மனத்துக்குள் சொல்லியவன்,
ESTÁS LEYENDO
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...