நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா -6

560 14 0
                                    

6
ஆர்ஷனின் கார் பளபளக்கும் பத்து மாடி கட்டடத்தின் முன்னால் அமைதிக்கு வந்தது. முதல் ஐந்து மாடி தளங்களும் எம்கே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகளின் ஒவ்வொரு பிரிவுகளுக்கும் உரித்தானது. மிகுதியை வாடகைக்கு கேட்ட சில வங்கிகளுக்கும் , இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும் கொடுத்து இருந்தனர்.

ஆர்ஷன் வண்டியை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு கையுறைகளை கழட்டி பாக்கெட்டில் போட்டவனாக, கைகளை தேய்த்தவாறு லிஃப்டில் நுழைந்தவன்  செல்லை எடுத்து,

''ஆபீஸ் வந்துட்டேன்மா'' என தாயின் செல்லுக்கு ஒரு மெசேஜ் அனுப்பிவிட்டு தனது அறைக்குள் நுழைந்தான். நண்பனும் கன்ஸ்ட்ரக்ஷன் மேற்பார்வையாளருமான ரிச்சர்ட்டு எதிர் கொண்டான்.

''ஆர்ஷ் ...ஏன்டா லேட்டு?''  ரிச்சர்ட் நேரத்தை பார்த்தவாறு கேட்டான்.

''சாரி ப்ரண்ட்....டாட் அண்ட் மம்மியையும் டிராப் பண்ணிட்டு வரேன்...'' என்றான்   வின்டர் கோட்டை கழட்டி அதற்குரிய இடத்தில் மாட்டிவிட்டு. தனது லேப்டாப் எடுத்தவாறு.

''அவங்க எல்லோரும் வந்திட்டாங்களா ?''.

''பில்டர்ஸ் எல்லோரும் உனக்காகத்தான் வெயிட்டிங். நாலாவது தளத்தில் நம்ம மீட்டிங் ரூமில் எமிலியா எல்லா பிளானிங்கையும் காட்டி விளக்கம் கொடுத்துக்கிட்டு இருக்கா...'' ரிச்சர்ட் சொல்லியவாறு வெளியேற  ஆர்ஷனும்  தலையாட்டியவாறே நாலாவது மாடிக்கு லிஃவ்ட் பட்டனை தட்டிவிட்டு ஒரு ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டான் .

''ஆர்ஷ் மார்னிங் போன மேட்டர் சக்ஸஸா? '' நண்பன் முகத்தில் எந்தவித உணர்ச்சிகளையும் படிக்க  முடியாது தோற்றவனாக வாய் திறந்தே கேட்டான் ரிச்சர்ட்.

''நத்திங் ! வழக்கம் போல i was rejected !'' என்றான் ஒரு புன்னகையுடன். ரிச்சர்ட்டின் முகம் கவலையை சூடிக்கொண்டது. லிஃவ்ட் திறந்ததும் அவர்கள். வெளியேறினார்கள்.

''டோன்ட் பீல் '' ரிச்சர்ட் ஆர்ஷனின் தோளைத் தட்டிக்கொடுத்தான்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWhere stories live. Discover now