நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 27

310 10 0
                                    

27

காரில் போய்க்கொண்டிருந்த ஆர்ஷன் தன் மொபைலில் படம் பிடித்திருந்த தாரிகாவின் போட்டோவையே பார்த்தவாறு அமர்ந்திருந்தான். அவனது உதடு மெல்ல சிரித்து விட்டுக்கொண்டது. அபிநவ் அவனை பார்ப்பதும் வீதியை பார்ப்பதுமாக இருந்தவன்,

''டேய் என்றா அரை நாளில ஆளே மாறிட்டே ? பொண்ணு போட்டோ பார்க்கமாட்டேன்னவனா அவ போட்டோவை பார்த்து காதல் ரசம் ஊத்துறது ?''

''ஹேய் அபி டார்லிங் ! சம்திங் ஸ்பெஷல்டா ! ..தா..ரி...கா...'' மெல்ல உச்சரித்து பார்த்தவன் தொடர்ந்து,

''தாரி...தாரு ...ம்ஹூம் இது நல்லா இல்லை. ரிகா ..ரிகா எஸ்... திஸ் இஸ் சோ சுவீட் ! ஆர்ஷன்-தாரிகா வாவ் சூப்பரா இருக்குடா''

''டேய் ஒரேயடியாக கவிழ்ந்துட்டேடா.. வேற பொண்ணை பார்க்க போயி பஜ்ஜி, சொஜ்ஜி ஒரு வாய் பார்க்கிறதுக்கு வழி இல்லாம பண்ணிட்டியேடா'' அபிநவ் மூக்கை சிந்தினான்.

''அபிமா ! லவ் இஸ் கிரேட் பீல் இல்லை?'' என கேட்டான் அவளது போட்டோவை பார்த்தவாறு.

''யாருக்கு தெரியும் கிரேட் பீலா ? கில் பீலா ? ன்னு லவ் பண்ணி தொலைச்சவங்களை கேட்கணும்...ஏன்டா அப்படி என்னடா மணிக்கணக்கா பேசினே ? எனக்கும் சொல்லேன். நாளைக்கு எனக்கு பொண்ணு பார்க்க போகும் போது நானும் ஒரு ஒண்ணவராவது பேசணும்... நீ பஜ்ஜியில எம்புட்டு லீட்டர் எண்ணெய் இருக்குன்னு அளக்கணும்''

''ஏய் கிண்டலா பண்றே... ? அவ சைலண்டா இருந்தாடா... நான்தான் பேசிகிட்டு இருந்தேன்... அவ ரொம்ப பயந்து ஒருவித நெர்வஸா இருந்தா''

''அவ பயப்படுற அளவுக்கு நீ என்ன பண்ணே?''

''ஹேய் ... நத்திங் ! பட் அவ என்னமோ சொல்ல தயங்கிக்கிட்டு இருக்குறது போல ஒரு பீல்''

''அவளுக்கு உன்னை புடிச்சதாலே தானேடா தட்டு எல்லாம் மாத்திக்கிட்டாங்க. கல்யாணம் ஆனதும் என்ன பயம்னு கேட்டு தெளிவு படுத்திடு''

''மேரேஜ் ...மேரேஜ்..ம்ம்ம் சீக்கிரம் பண்ணனும்'' ஆர்ஷன் தாரிகாவின் போட்டோவை பார்த்தவாறே சொன்னான்.

''டேய் அலையாதேடா''

''டோன்ட் டாக் ரப்பிஷ் ! மேரேஜானதும் பிராண்டாகிடுவா.. பேசலாம்.. பழகலாம் தினமும் பக்கத்துல பார்க்கலாம்.. அதை சொல்ல வந்தேன்''

''என்னது பிராண்டாக்கலாமா ? பேசலாம் ...பழகலாமா ? அடேய்.. அடேய் என்னடா உளறிட்டு இருக்கே ? மேரேஜானா அவ உன் பொண்டாட்டிடா... நீ அவ ஹஸ்பண்ட்... ரெண்டு பேரும் என்ன பண்ணனும் தெரியுமா ?'' அபிநவ் கேட்க, ஆர்ஷன் முகம் சிவக்க,

''அது எனக்கும் தெரியும்... பர்ஸ்ட் லவ்.. லவ்... லவ் பண்ணணும் அவ ஒவ்வொரு செயலையும், அவ ஒவ்வொரு வார்த்தையையும் ரசிச்சு.. ரசிச்சு.. லவ்வு பண்ணணும்.. அவ பயம் போய் ... தன்னால என்னை தேடணும்.. எனக்காக துடிக்கணும்... என் காதலா ? அவ காதலா ? ன்னு போட்டி போடணும். எனக்குள் அவளை கரைக்கணும்... அவளுக்குள் நான் ஃப்ரீசர் ஆகணும்.. தென் லைவ் ஸ்டார்ட் ...நீ இனி என் லவ் மேட்டருக்குள்ளே நோசை நீட்டாதே'' என்றான் சிறு முறைப்புடன்.

''ஏது லவ் பண்ணி கல்யாணம் பண்ணுவாங்க... இவன் என்னடான்னா லவ் பண்றதுக்காக கல்யாணம் பண்றானேடா ! ஈஸ்வரா... இவன எந்த லிஸ்டில் சேர்க்க ?'' அபிநவ் வாய் விட்டே கத்தியவாறு கேட்டான்.

''ஹேய் I am british எங்க திங்கிங் வே வேற லெவல்'' என்றான் அவனின் முதுகில் ஒன்று வைத்து . எமிலியா வீடியோ காலில் அழைத்தாள்.

அவள் மிகவும் சந்தோஷமடைந்தாள். தாரிகாவின் போட்டோவை அவளுக்கு வாட்சப் செய்து இருந்தான். அதை பார்த்த அடுத்த நொடி அவள் வீடியோ கால் எடுத்தே விட்டாள் . ஆர்ஷனின் வாயால் தாரிகாவை ''பிடித்து இருக்கு'' என கேட்டதும் சிலுவை குறி போட்டவளாக,

''தாங்க் டூ ஜீசஸ்'' என்றாள். அபிநவ்வுடன் அவளும் சேர்ந்து ஆர்ஷனை கலாய்க்க அந்த வண்டி சிரிப்பால் குலுங்கியவாறு வீடு வந்து சேர்ந்தது.
(...)

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாNơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ