43
அடுத்த நாள் தருணும் வந்து இறங்கினான். ஆர்ஷனின் கிழக்கு லண்டன் கம்பனிகளில் ஒன்றில் முக்கிய பொறுப்பு கொடுத்து அங்கேயே வீடும் பார்த்து அவனை தங்க வைத்தான்.
சண்முகவேவேலின் நடை, உடை எல்லாம் மாறி போனது. புதிதாக வாங்கிய பங்களாவில் ஏவல் செய்யும் வேலை பார்த்தார்.
தர்சனாவுக்கும் அவளது தையல் தொழிலை விரிவுபடுத்த வேலைக்கு ஆட்களை அமர்த்தி மாறனை பொறுப்பாக இருக்கும் வைக்கும் நிலைக்கு உதவி இருந்தான் ஆர்ஷன்.
அவர்களுக்கு செய்த உதவி அவர்களால் திருப்பி தர வேண்டும் என்று சொல்லித்தான் கொடுத்து இருந்தான்.
சும்மா உதவி செய்தால் முன்னேறாது சோம்பேறி ஆகிவிட வாய்ப்பு இருக்கிறது. சும்மா தானே தருகிறான் இவனிடம் கொட்டிகிடைக்கிறதோ ? என அவர்களும் எண்ணி விட கூடாது. அதனால் அவனே முன்கூட்டியே தெளிவாக அபிநவ்விடம் சொல்லியும் விட்டிருந்தான்.
''பங்களா நான் ரிகாவுக்காக வாங்கியது. மத்த எல்லா உதவிகளும் அவர்கள் குறிப்பிட்ட காலத்தினுள் திருப்பி தரத்தான் வேண்டும் என்ற ஒப்பந்த பத்திரத்தில் கையொப்பம் வாங்கிவிட்டுத்தான் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்'' என.
மாறனும் கடனை திருப்பி அடைக்க வேண்டும் என்ற ஒரு மனது இருந்ததால் கொஞ்சம் குடியை குறைத்து பொறுப்பாக இருக்க முயற்சித்தான்.
அருணும் அவனுக்காக தந்தை பட்ட கடனை மாப்பிள்ளையாக வந்தவரிடம் கேட்பது முறையல்ல என எண்ணியவனாக அவனே அதை பார்த்துக்கொள்ள, ஆர்ஷன் வட்டிக்கு கட்ட வேண்டாம். கடனாக உதவி செய்து மாதம் ஒரு தொகையை திருப்பி விடுமாறு செய்து இருந்தான். முதலில் வத்ஸலாவும், அருணும் மறுத்தாலும் மாமனார் சண்முகவேல்,
''அநியாயமாக வட்டியே அவனை தின்னுகிட்டு இருக்குதும்மா ! பாவம் அவன் கொஞ்சம் மூச்சு விடட்டும் ! நம்ம மாப்பிளைகிட்டே கடனாக தானே ?'' என அவளை ஒத்துக்க வைத்தார்.
![](https://img.wattpad.com/cover/317550114-288-k835589.jpg)
BINABASA MO ANG
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...