நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா -3

554 12 0
                                    

3
நடந்தது இதுதான் ஆரன் டீன் ஏஜ் வயது தாண்டியதும் பழக்கவழக்கங்களும் மாற தொடங்கியது.

நிறைய நண்பர்கள் எப்பொழுதும் ''என்ஜாய்'' தான் அவன் தாரக மந்திரம். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தாலும் நண்பர்களுடன் நேரம் காலம் இல்லாது பார், பப்புகள் சுத்துவதும், கிளப்புகளும் என பொழுதுகள் மாறியது.

பெண் நண்பர்கள் வீட்டுக்கு வருவது, சில நேரம் அவர்களது வீட்டில் இவனும் தங்கி விடுவது. இப்படி மொத்தமாக எல்லாம் தலை கீழாக தொடங்கியது. ஏற்கனவே முன்கோபியானவன், பெற்றவர்கள் எது சொன்னாலும் முரண்டு பிடிக்கவே செய்தான்.

கண்டிக்க முடியவில்லை. இருக்கும் நாட்டின் சட்டங்கள் வேறு வசதியாக அமைந்திருப்பதே பாதி பிள்ளைகள் பாதை மாறி போவதற்கு காரணம்.
மனோகர் கவுரவம் கெடாது பக்குவமாக மகனை உட்கார வைத்து கோச்சிங், கவுன்சிலிங் கொடுத்தாலும் பெரியவனோ,

''நான் பிரிட்டிஷ் காரன் பட்டிக்காட்டுத்தனமா கண்ட்ரோல் பண்ணாதீங்க'' என முகத்திலடித்தது போல சொல்லிவிடுவான்.

சுபத்திராவும் மகனை சாந்தப்படுத்தவா? கணவனை சாந்தப்படுத்தவா? என திண்டாடிப்போவாள். தினம், தினம் தமையன் பெற்றவர்களுடன் நடத்தும் வாக்குவாதங்கள், சண்டைகள் எல்லாம் பார்த்து, பார்த்தே வளர்ந்தான் ஆர்ஷன்.

பெரியவன் கட்டுக்கு அடங்காது போக தொடங்க, அடுத்த மகனை அப்படியே விட்டு விடக்கூடாது என அவர்கள் சுதாரித்து கொண்டனர்.

விளைவு ஆர்ஷனுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க தொடங்கினார்கள். ஆரனிடம் என்ன குறைகள் எல்லாம் உண்டோ, அதை எதையும் ஆர்ஷனிடம் நெருங்கவே விடாது காத்தனர். ஆர்ஷனும் தினமும் பெற்றவர்கள் தமையனால் கலங்குவதை பார்த்தவன். தன்னால் அவர்கள் கலங்க கூடாது என சின்ன வயதிலேயே உறுதி பூண்டான்.

பெரியவனோ மேற்கத்திய கலாச்சாரத்தையே பின்பற்றினான். அதனை சுபத்திரா மனோகர் தம்பதிகள் ஜீரணிக்க கஷ்டப்பட்டார்கள் எனலாம். அதிலும் அளவுக்கு அதிகம் செல்லம் கொடுத்ததால், கவனிப்பு இருந்தும் ஒரு பிள்ளையை ஒரு வழிக்கு வளைக்க முடியவில்லை. சில நேரம் கை கழுவி விடலாமா ? என கூட நினைத்தார் மனோகர்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாWo Geschichten leben. Entdecke jetzt