80
அடுத்த நாள் காலை ஆர்ஷன் தாரிகாவை அழைத்து போக வரவேண்டும். காலையில் சீக்கிரமாக எழுந்து தயாராகி தனது அறைக்குள் அவனது அழைப்பு வருமா ? என மொபைலை பார்ப்பதும், நகத்தை கடிப்பதுமாக இருந்தாள்.
கீழே மற்றவர்கள் அவரவர் வேலைகளில் ஈடுபட்டு இருந்தாலும் தவித்து கொண்டிருக்கும் தாரிகாவை கவனிக்க தவறவில்லை.
வத்ஸலா ஒரு படி மேலே போய் ''தாரு மாப்பிளை மறந்து போய் லண்டன் போயிட்டாரோ என்னமோ ?'' என சீண்டினாள்.
''சீ போங்கண்ணி...'' என்றாள் வெட்கத்துடன். வத்ஸலா நாத்தானரை பாசமாக பார்த்துவிட்டு போக, தாரிகாவின் செல் அலறியது. பாய்ந்து எடுத்தாள். மறுமுனையில் ஆர்ஷன்,
''ஹாய் பேபி சாரி...அர்ஜெண்டா லண்டன் போயாகணும். ஏர்போட் போய்க்கிட்டு இருக்கேன்'' என்றான்.
தாரிகா அதிர்வுடன்,
''டேய் காலங்கார்த்தாலேயே எனக்கு கடுப்பை கிளப்பாதே ! உண்மைய சொல்லு'' என அவசரமாக வினவினாள்.''கூல் பேபி ! கூல் ! அடுத்த பிளைட்டுல திரும்பிடுவேன். ஒரு மூணு நாள் தான் ஓகேயா ?'' என்றான் அவன்.
''ஆர்ஷன் நிஜமாவா சொல்றீங்க? எ..ன்..னால... நான்... எவ்..வளவு ஆசையாக இருந்தேன் தெரியுமா? நா...ன்.. நா..ன் ம...னசு விட்டு உ..ங்.க..உ..ங்ககிட்டே கொட்டி அ..அ...ழணும்ன்னு காத்திருந்தேன் தெரியுமா? என்னை ஏமாத்திட்டீங்கள்லே?'' அவள் குரல் விம்ம,
''ஹேய் பேபி ஏர்போட் வந்துடுத்து. பிளைட் ஏறியதும் கால் பண்றேன் பை'' என்றுவிட்டு அவள்,
''ஆர்ஷன்'' என கூவ அதை சட்டை செய்யாது வைத்தான்.
தாரிகா நிலைமை வார்த்தைகளில் வடிக்க முடியாத நிலை என்றானது. மொபைலை சுழட்டி எறிந்தவள், கட்டிலில் குப்புற விழுந்து அழுதாள். அவளது ஏக்கமும், அவனை பிரியும் மனநிலையும், மனம் முழுதும் அவன் மேல் நிறைந்திருந்த காதலும், அவனது அணைப்புக்காக ஏங்கிய நெஞ்சமும், அவளை போட்டு வதைக்க அழுதாள்.
கீழே ஒரே சிரிப்பொலியாக இருக்க என்ன சிரிப்பு வேண்டிக்கிடக்கு ? என கேட்க கடுப்புடன் எழுந்து வந்தாள். அங்கே ஆர்ஷன் கூடத்தில் எல்லோருடனும் பேசிக்கொண்டு இருந்தான். இவளை பார்த்து கண் சிமிட்டினான்.
![](https://img.wattpad.com/cover/317550114-288-k835589.jpg)
ESTÁS LEYENDO
நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதா
Romanceஅருணோதயம் வெளியீடு ஏப்ரல் 2022 வெளிநாட்டு மாப்பிள்ளை என்றாலே தவறானவர்கள் என்ற அபிப்ராயத்தால், ஒரு பெண்ணின் வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை மிகத் தெளிவாக சொல்லி இருக்கும் நாவல். வெளி நாடுகளில் வாழும் ஆண்கள் எப்படி இருப்பார்கள் என்ற இந்தியா போன்ற கலா...