நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 17

394 12 0
                                    

17
தாரிகா மடிக்கணனி பை தோளில் தொங்க கைகளில் சில புத்தகங்கள் தாங்கியவாறு வேலை முடிந்து களைப்பாக வீட்டில் காலடி எடுத்து வைத்தாள்.

வேலை செய்யும் நேரத்தை தவிர சிறு நொடிகள் கிடைத்தாலும் படிக்க தொடங்கிவிடுவாள். அதனால் கூடவே மடிக்கணனி, படிக்கும் புத்தகங்கள் எடுத்துக்கொண்டு போவது வழக்கமாகி கொண்டிருந்தாள். இவள் குணத்தையும் படிப்பின் மீது இருக்கும் ஆர்வத்தையும் பார்த்த அவளது முதலாளி வேலைகளில் சரியாக இருக்கும் பெண் எவரது வம்பு, தும்புக்கும் போகாதவள். அவரால் தடை சொல்ல முடியவில்லை.

மகளை கண்டதும் சாவித்திரிக்கு உள்ளுக்குள் கலவரமாக தொடங்கியது. சொல்லப்போகும் விஷயத்தை எப்படி எதிர்கொள்வாளோ ? எவ்வாறு ஏற்றுக்கொள்வாளோ ? என்ன ஆவாளோ என அவள் மனம் தத்தளிக்க தொடங்க மருமகள் வத்ஸலா வை திரும்பி பார்த்து கண்களால் பேசினாள்.

''நீதான் பார்த்துக்கணும்'' என்று சொல்வது போல இருந்தது. வத்ஸலா வும் கண்களாலேயே பதில் சொல்லி மாமியாரை அமைதியாக்கினாள்.

அருண் முடிந்தவரை தான் வாய் திறக்க கூடாது என முடிவு எடுத்தான். தங்கை தன்னை சுயநலக்காரன் என்று எண்ணி விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தான் எனலாம்.

தருணோ ''எப்படியாவது தாரிகாவை brain wash பண்ணிடனும்... ஈஸியான through பிளைட்டுடா லண்டனுக்கு... எவனுக்கு கசக்கும் ? இந்த சந்தர்ப்பத்தை நழுவவிட கூடாது'' என சொல்லிக்கொண்டான்.

எல்லோரும் ஹாலில் ஆளுக்கொரு இடத்தில் நின்றவாறே தன்னை பார்ப்பதை கவனித்த தாரிகா,

''என்ன குடும்பமே வரவேற்றுக்கொள்ள காத்திருக்கு ? ஏது விஷேஷமா ? இல்லை பிராப்ளமா?'' என சிரித்தவாறே கேட்டாள் .

''ஒரு பிராப்ளமும் இல்லை தாரு ... முகம் கழுவி, சாமி கும்பிட்டு பிரஷ்ஷா வா! அண்ணி உன்கிட்டே பேசணும்'' என்றாள் வத்ஸலா ஒரு சிரிப்பை உதிர்த்தவாறு.

''அண்ணா தப்புபண்ணிட்டீங்களா? அண்ணி என்கிட்டே நியாயம் கேட்க போறாங்களா? எதுவா இருந்தாலும் என் ஒட்டு அண்ணிக்குத்தான்'' என சிரிப்புடன் சொல்லியவள் வத்ஸலாவை பின்பக்கமாக வந்து கைகளை தோளில் மாலையாக போட்டவாறு கொஞ்சினாள்.

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora