நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்... !எஸ்.ஜோவிதா - 69

351 10 0
                                    

69

இந்தியா

சண்முகவேல் குடும்பம் பழையபடி வாடகை வீட்டுக்கு மாறியது. அருண் கொஞ்சம் வசதி கூடியதாக பார்த்து எடுத்து இருந்தான்.

பங்களாவின் பதிவு மாற்றம் செய்ய போய் ஏமாற்றத்துடன் வந்தாள். அவனது கையொப்பமும் வேண்டும் என்று அதில் இருந்தது தான் காரணம். அது இல்லாது இவளால் எதுவும் செய்ய முடியாது. கடுப்பு ஏறியது.

''எனக்கு வேண்டாம் ! என் இஷ்டம் மாத்திக்கொடுக்க இதுல அவரோட சைன் எதுக்கு ?'' என அவள் பதிவாளர் அறையில் சத்தம் போட்டாள்.

''அம்மா பெரிய இடத்து விவகாரம் ! பேசாம போங்கம்மா'' என்றுவிட்டு போனார் அந்த பணிப்பளார். தங்கையை சமாதானப்படுத்தினான் அருண்.

''இரும்மா மாப்பிளை இங்கு வரும் பொழுது மாத்தி கொடுத்திடலாம். இப்போ இதை விடு !'' என்றவாறு வீட்டுக்கு அழைத்து வந்தான்.

''அவனுக்கு இப்படி வரும் என்று தெரியும். அதனால் தான் உங்க இஷ்டம் போல செய்ங்கன்னு சொன்னான்னா ?'' கோபம் வர அவனது மொபைலுக்கு தொடர்பு கொண்டாள். அவன் எடுக்கவும் எடுத்த எடுப்பிலேயே,

''எனக்கு வேணாம் நான் மாத்தி தரேன்னா அதுக்கு எதுக்கு உங்க சைன் ? அது வைச்சா தான் முடியுமாம்..''என எகிறினாள்.

''ஐ சி அப்படி சொல்லிட்டாங்களா ? எனக்கு உங்க நாட்டு சட்டம் எதுவும் தெரியாதே ! நான் வேணும்ன்னா எல்லா வேலையையும் போட்டுவிட்டு அடுத்த பிளைட்டுல சைன் வைக்க பறந்து வரட்டுமா ?'' என கேட்டான்.

''இவன் சீரியஸாக கேட்குறானா ? இல்லை கிண்டல் பண்றானா ?'' குழம்பியவளாக,

''ஒரு மண்ணும் வேணாம் ! நான் பத்திரம், அப்புறம் சாவி, எல்லாம் உங்க பிரண்டுகிட்டே கொடுத்துடுறேன். நீங்க எப்போ வருவீங்களோ ? வந்து வாங்கிக்கோங்க. அப்போ ரிஜிஸ்தர் ஆபீஸ் போயிக்கலாம். இது முடியாம எனக்கு தலைவலியா இருக்கு''

''தலைவலி உங்களுக்கா ? எனக்கா ?'' என கேட்டான். அவன் அவள் பேசாது இருக்க,

நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்...!-எஸ்.ஜோவிதாOnde histórias criam vida. Descubra agora